என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "follow"
- ஈரோடு நகர நகைக்கடை உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், வியாபாரிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.
- இதில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு முறைகளை வியாபாரிகள் கடைபிடிக்க வலியுறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நகர நகைக்கடை உரிமையா ளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், வியாபா ரிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.
கூட்டத்தில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியு ள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக பெரிய நகை கடைகள், திருமண மண்டபங்களில் நடை பெறும் விஷேசங்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி விடுமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
கடைக்கு வரும் பொது மக்கள் முககவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உண்டான பொருட்களை வழங்க வேண்டும். கடை களில் கிருமிநாசினி வைத்தி ருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்.
இதேபோல் திருமணம் போன்ற விசேஷங்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.