என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "food safety dept"

    • கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.
    • செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்த முடியாது.

    உத்தரப் பிரதேசத்தில் ரசாயனத்தை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்த விநியோகம் செய்த  தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் அகர்வால் டிரேடர்ஸ் உரிமையாளர் அஜய் அகர்வால் உண்மையான பால் போல் தோன்றும் வகையில் ரசாயனங்களில் செயற்கை இனிப்புகள் மற்றும் சுவைகளை கலக்கிறார். இந்த முறையில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அகர்வாலின் கடை மற்றும் 4 குடோன்களில் சோதனை நடத்தி, தொடர்புடைய ரசாயனங்களைப் பறிமுதல் செய்தனர்.

    அகர்வால் போலி பாலை உருவாக்க பயன்படுத்திய ரசாயனங்கள் என்ன என்று இன்னும் கண்டறியப்படாத நிலையில் அதில் 5 மில்லிலிட்டர்களை மட்டுமே பயன்படுத்தி 2 லிட்டர் வரை போலி பாலை THAYAARIKAமுடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 1 லிட்டர் ரசாயனத்தைப் பயன்படுத்தி 500 லிட்டர் போலி பாலை தயாரிப்பதற்குச் சமமாகும்.

    சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

    இந்த கெமிக்கல் பார்முலாவை உள்ளூர் கிராம பால் விற்பனையாளர்களுக்கும் அகர்வால் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த பார்முலாவை அவர் எங்கு தெரிந்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • உணவகம், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு உணவகம், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல்லடம் என்.ஜி.ஆர். சாலை, திருச்சி சாலை, பஸ் நிலையம் பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிம்பிகை தலைமையில் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 67 கிலோ திண்பண்டங்கள், 5 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக் வைத்திருந்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அந்தக் கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகள் மீது சரியான தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் பாக்கெட்டின் மேற்புரத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவு தரம் மற்றும் கலப்படம் குறித்த புகார்களுக்கு வாட்ஸ்அப் 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையின் இந்த வாட்ஸ்அப் எண்ணை அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    • மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • தரமற்ற சமையல் எண்ணெய் டின்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர்.

    உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய அதிகாரிகள் நேரடியாக மேற்கு மாம்பலத்துக்குச் சென்று அங்குள்ள மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை கடைகளில் இருந்த சமையல் எண்ணெய் மற்றும் மற்ற எண்ணெய்களின் தரத்தை ஆய்வு செய்தனர். கடைகளில் கீழ் தளத்திலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் தரமற்ற சமையல் எண்ணெய் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எண்ணெயை பேக்கிங் செய்து விற்பனை செய்ய தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சரியான முறையில் ஷவர்மா உணவு தயாரிக்கப்பட்டு இருந்தால் சாப்பிடலாம் என தெரிவித்தார்.

    ×