என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Food Traders"
- உணவு பாதுகாப்பு உரிமை மற்றும் பதிவு சான்று வழங்கும் முகாம் சிறப்பு நடைபெற்றது
- மளிகை கடை, ஓட்டல், தள்ளுவண்டி உணவுக் கடை, போன்றவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சான்றுகளை பெற்றுக் கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட பல்லடம் நகராட்சி மற்றும் பல்லடம் வட்டார பகுதிகளில் உணவு வியாபாரம் செய்யக்கூடிய மளிகை கடை உரிமையாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், ஓட்டல் ,பேக்கரி, மெஸ், மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களின் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமை மற்றும் பதிவு சான்று வழங்கும் முகாம் சிறப்பு நடைபெற்றது. பல்லடம் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மொத்தம் 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மளிகை கடை, ஓட்டல், தள்ளுவண்டி உணவுக் கடை, போன்றவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சான்றுகளை பெற்றுக் கொண்டனர்.
- உணவு வணிகர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பல்லடம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது.
- பயிற்சி முடிவில் அனைவருக்கும் மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.
பல்லடம்:
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மத்திய அரசின் ஏஜென்சி ஆகியவை இணைந்து நடத்திய உணவு வணிகர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பல்லடம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது. பல்லடம் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்,மெஸ் உரிமையாளர்கள்,பேக்கரி உரிமையாளர்கள்,உணவு பொருட்கள் விநியோகி ஸ்தர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட உணவு வணிகர்கள் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சியில் தன் சுத்தம் பேணுதல், பராமரிப்பு, உணவு கையாளும் முறைகள், பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் வகைகள், உணவுப் பொருளில் ஏற்படக்கூடிய கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு உணவு வணிகரும் ஒவ்வொரு உணவு கையாளுபவர்களும் பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற நபரை பணிக்கு அமர்த்த வேண்டும். உணவு உற்பத்தி அல்லது வணிகம் மேற்கொள்ளும் அனைத்து உணவு வணிகர்களும் கட்டாயம் மத்திய அரசால் வழங்கப்படும் ஒருநாள் உணவு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- வணிகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- ஆண்டு கணக்கை எப்.ஓ.எஸ்.சி.ஓ.எஸ்., இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.
திருப்பூர் :
அனைத்து உணவு வணிகர்களும் ஆண்டு கணக்கை வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.உணவுப்பாதுகாப்பு துறையில், பதிவு, லைசென்ஸ் பெற்ற வணிகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு கணக்கு அறிக்கையை வரும் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.ஆண்டு கணக்கை எப்.ஓ.எஸ்.சி.ஓ.எஸ்., இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும். நேரில் இ-மெயில் வாயிலாக அனுப்பப்படும் அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.வருகிற 31-ந் தேதிக்கு பின் சமர்ப்பிக்கப்படும் கணக்கிற்கு அபராதமாக, தினமும் ரூ.100 வசூலிக்கப்படும். அவ்வாறு கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 0422 - 2220922 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜே.பி.நட்டாவிடம் உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு கொடுத்தனர்.
- 4 வழிச்சாலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் புதுடெல்லி, மைசூரில் இருப்பதுபோல “அண்டர் பாஸ் ரன்வே” அமைத்து விமான நிலைய விரிவாக்க பணியை நிறைவேற்ற வேண்டும்.
மதுரை
கடந்த 22-ந்தேதி மதுரை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், செயலாளர் வேல்சங்கர் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்த னர். அதில் கூறியிருப்பதா வது:-
மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பல உணவு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால் வரி ஏய்ப்போர் கைகளுக்கு பல தொழில்கள் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாரம்பரியமாக ெதாழில் செய்து கொண்டிருந்த பலர் தங்களது ெதாழிலை இழந்து அதை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாவதற்கு முன்பிருந்து, இந்த வரி வரவேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
உணவு பொருட்களை பேக் செய்வதற்கு பிளாஸ்டிக்கை தவிர வேறு எந்த மாற்றுப்பொருளும் சந்தையில் இல்லை. பிளாஸ்டிக்கை தவிர வேறு எந்த பொருளிலும் உணவு பொருட்களை பேக் செய்தால் வெகுவிரைவில் கெட்டுவிடும்.
எனவே பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருள் தாராளமாக சந்தையில் கிடைக்கும் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீதுள்ள தடைகளை நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு அருகில் 4 வழிச்சாலை உள்ளது.
இதனால் விமான ஓடு பாதையை நீட்டிக்க காலதாமதமாகிறது. 4 வழிச்சாலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் புதுடெல்லி, மைசூரில் இருப்பதுபோல "அண்டர் பாஸ் ரன்வே" அமைத்து விமான நிலைய விரிவாக்க பணியை நிறைவேற்ற வேண்டும். இவை உள்பட மேலும் பல கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்