search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foodstuff"

    • பொது விநியோக பொருள்களான கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும்
    • புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    போரூர்:

    சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு :- பொது விநியோக பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும் இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது விநியோக பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடத்தி, கலப்படம், தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
    • சிவில் பிரிவில் பதியப்பட்ட 57 வழக்கு களுக்கு 6 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து டி.ஆர்.ஓ. மேனகா உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ‌ஜூன் மாதம் வரை உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடத்தி, கலப்படம், தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

    அதில் போலி, உணவுக்கு ஒவ்வாத, கேடு விளைவிக்கக்கூடியது என கண்டுபிடித்து சேலம் டி.ஆர்.ஓ. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அபராதம்

    சிவில் பிரிவில் பதியப்பட்ட 57 வழக்கு களுக்கு 6 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து டி.ஆர்.ஓ. மேனகா உத்தரவிட்டார்.

    அதில், அதிகபட்சமாக பல்வேறு வகை நொறுக்கு தீனி, தரமற்று உடல் உபாதையை உண்டுபண்ணும் என கண்டறிந்து பதிந்த 18 வழக்கில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய், கலப்படம், தரமற்ற ஜவ்வரிசி தொடர்பான 17 வழக்கில் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், சமையலுக்கு ஒவ்வாத மசாலா ெதாடர்பான 7 வழக்கில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய், சமையல் எண்ணை தொடர்பான 6 வழக்கில் 66 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 57 வழக்குகளுக்கு அபராதம் விதித்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    123 வழக்குகள் நிலுவை

    இது தவிர இன்னும் 123 சிவில் வழக்கு நிலுவையில் உள்ளன. மேலும் 273 குற்ற வழக்கு நீதிமன்ற விசாரணையிலும், 22 குற்ற வழக்கு நீதிமன்றத்தில் பதிவாகாமல் இருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.

    ×