search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foreign minister"

    • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஒருநாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார்.
    • புதிய அரசு அமைந்தபின் வெளியுறவுத்துறை மந்திரி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது.

    கொழும்பு:

    மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி தாரக பாலசூரியா, கிழக்கு மாகாண கவர்னர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

    இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

    அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    முன்னதாக, இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பராகவும் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பயணம் இணைப்புத் திட்டங்களுக்கும், துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்ற ஒத்துழைப்புக்கும் உத்வேகம் சேர்க்கும் என தெரிவித்துள்ளது.

    • இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்தி மீதான குற்றவழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம்.
    • எங்களின் புரிதலுக்கு எட்டிய வரை ராகுல்காந்தி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்கா ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என்று ஜெர்மனி அரசு கருத்து தெரிவித்து உள்ளது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் செய்தி தொடர்பாளர் டெல்லியில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்தி மீதான குற்றவழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டிய வரை ராகுல்காந்தி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

    அந்த அப்பீல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா? என்பது தெளிவாகும்.

    அந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயக கொள்கைகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் நேற்று பேசும்போது, "எந்தவொரு வெளிநாட்டு தூதரும் ராகுல்காந்தி விவகாரம் குறித்து என்னிடம் பேசவில்லை" என்று தெரிவித்து உள்ளார்.

    • இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • தேர்தல் ஆணையத்தன் செயல்பாட்டிற்கு ஜெர்மனி மந்திரி பாராட்டு.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி அன்னாலெனா பேர்பாக் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோரை சந்தித்த அன்னாலெனா தலைமையிலான ஜெர்மன் பிரதிநிதிகள் குழு, இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்காளர்கள் எளிதில் வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்படும் விரிவான பயிற்சி முறை உள்ளிட்டவை குறித்து ராஜீவ் குமார் அப்போது விளக்கம் அளித்தார். தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பங்கேற்பையும் இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    போலியான சமூக ஊடக தாக்கம், பெரும்பாலான தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு ஒரு சவாலாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக செயல்பாட்டை ஜெர்மனி வெளியுறவு மந்திரி பாராட்டினார். டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • உலக அமைதி மற்றும் ஸ்திரதன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன.
    • எனது முதல் பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

    பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா, 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு நலன், மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இந்தியாவுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அனுப்பியிருந்த செய்தியை, பிரதமர் மோடியிடம் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் எடுத்துரைத்தார். பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் அதிபர் மேக்ரோனுடன் நடந்த சந்திப்புகளை பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்த கேத்தரின்,  பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய ஜெய்சங்கர் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார். 


    பின்னர் பேசிய பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளதாவது: ஒரு மந்திரியாக இந்தியா வருவது இதுவே முதன்முறை, எனது முதல் பயணமாக இந்தியாவை தேர்வு செய்தேன்.  இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாளிகளில் பிரான்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. பாதுகாப்புத் துறையில், வேறு எந்த நாடும் வழங்காத அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிந்து கொள்வதை நினைத்து பிரான்ஸ் பெருமை கொள்கிறது. உலக அமைதி மற்றும் ஸ்திர தன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    இந்தியா இம்மாதம் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று நம்பகமான உளவு தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் மந்திரி கூறினார். #ShahMehmoodQureshi #India #Pakistan
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி மத்திய துணை ராணுவப்படை வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான்.

    நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இத்தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் தேதி, இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தன. இதற்கு பதிலடி தருவதற்காக, மறுநாள், இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இந்திய விமானி அபிநந்தனை பிடித்து சென்றது.

    பின்னர், விமானியை இந்தியாவிடம் ஒப்படைத்தது. இத்தகைய சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளன.

    இந்நிலையில், இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் அச்சம் தெரிவித்துள்ளது. முல்தான் நகரில் நேற்று பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெக்முத் குரேஷி இதை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் வகுத்துள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. தாக்குதலுக்கான ஏற்பாடுகளை இந்தியா செய்து வருகிறது. இந்த தகவலின்படி, ஏப்ரல் 16-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் தாக்குதல் நடக்கலாம்.

    ஏற்கனவே நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தவும், பாகிஸ்தான் மீது தூதரக ரீதியான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவும் இந்த தாக்குதலில் இந்தியா ஈடுபட உள்ளது.

    இதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களிடம் ஏற் கனவே முறையிட்டு விட்டோம். பாகிஸ்தானின் கவலையையும் தெரிவித்துள்ளோம். சர்வதேச நாடுகள், இந்தியாவின் இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையை கவனத்தில் கொண்டு, அந்நாட்டை கண்டிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்த பிராந்தியத்தில் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், பாகிஸ்தான் மந்திரியின் இந்த அலறல் பேச்சை அங்குள்ள எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி கண்டுகொள்ளவில்லை.

    அக்கட்சியின் மூத்த தலைவர் நபீசா ஷா கூறுகையில், “பாகிஸ்தான் அரசு செயல்படவே இல்லை. இப்போது, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக, இந்தியாவின் போர் அச்சுறுத்தலை பயன்படுத்துகிறது” என்றார்.  #ShahMehmoodQureshi #India #Pakistan
    ஈரானின் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்து வந்த முகமது ஜாவத் ஷாரீப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். #Iran #MohammadJavadZarif #Resignation
    வாஷிங்டன்:

    ஈரானின் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்து வந்தவர் முகமது ஜாவத் ஷாரீப் (வயது 59). இவர் நேற்று முன்தினம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் தெரிவிக்கையில், “பதவியில் தொடர முடியாததற்கும், எனது பதவி காலத்தில் நிகழ்ந்த தவறுகள் மற்றும் குறைபாடுகளுக்கும் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என குறிப்பிட்டார்.

    எனினும் முகமது ஜாவத் ஷாரீப்பின் ராஜினாமாவை அதிபர் ஹாசன் ருஹானி ஏற்றுக்கொண்டாரா? அல்லது நிராகரித்தாரா? என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஐ.நா.வுக்கான ஈரான் தூதராக பதவி வகித்து வந்த முகமது ஜாவத் ஷாரீப்பை கடந்த 2013-ம் ஆண்டு வெளியுறவு மந்திரி பொறுப்புக்கு அதிபர் ஹாசன் ருஹானி நியமித்தார்.

    2015-ம் ஆண்டில் ஈரானுக்கும், பிற சர்வதேச நாடுகளுக்கும் இடையே அணுசக்தி உடன்படிக்கை ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தையில் முகமது ஜாவத் ஷாரீப் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   #Iran #MohammadJavadZarif #Resignation

    பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். #PulwamaAttack #IndiaIsolatesPakistan #PakForeignMinister
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி தற்கொலைத் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுகூலமான நாடு அந்தஸ்தை ரத்து செய்த இந்தியா, அந்நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்தியாவின் இந்த திட்டம் நிறைவேறாது என பாகிஸ்தான் கூறி உள்ளது.

    இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் தொடர்பாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரேசி பேசியதாவது:-

    வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வர உள்ளனர். மார்ச் 23ம்  தேதி நடைபெறும் பாகிஸ்தான் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் மகாதீர்  முகம்மது பங்கேற்க இருக்கிறார். அதேபோல், ஜெர்மன் மந்திரி ஹீகோ மாஸ் மார்ச் 12 ஆம் தேதி பாகிஸ்தான் வர உள்ளார். ஐரோப்பிய யூனியனின் உயர் பிரதிநிதி விரைவில் இஸ்லாமாபாத் வர இருக்கிறார். எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைக்கும் இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவது இல்லை.



    மும்பை தாக்குதலுக்கு பிறகு என்ன நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததோ, அதே நிலைப்பாட்டை தான் தற்போதும் எடுத்துள்ளது.  புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதேவேளையில், இந்தியா தாக்க நினைத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயங்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #PulwamaAttack #IndiaIsolatesPakistan #PakForeignMinister
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீம் யுவேஸ் லி டிரியன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #FranceForeignMinister #JeanYvesLeDrian #PMModi
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜீம் யுவேஸ் லி டெல்லி வந்துள்ளார். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று அவர் சந்தித்து இந்தியா-பிரான்ஸ் இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.



    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா, இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது, தனித்துவமானது என குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை கூட்டுறவை அதிகரிக்க இன்றைய சந்திப்பின்போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    பின்னர், ஜீம் யுவேஸ் லி டிரியன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #FranceForeignMinister #JeanYvesLeDrian  #PMModi
    பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி அரேபியாவில்தான் விசாரணை - நடைபெறும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #Khashoggikillers #JamalKashoggi
    மனாமா:

    துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான குற்றவாளிகள் 18 பேரை சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டும்.

    அவர்கள்மீது எங்கள் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, தண்டனை விதிக்கப்பட வேண்டும் என துருக்கி அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.



    இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேரையும் நாங்கள் கைது செய்து காவலில் அடைத்துள்ளோம்’ இதுதொடர்பான விசாரணையும் சவுதி அரேபியா நாட்டில்தான் நடைபெறும் என சவுதி வெளியுறவுத்துறை மந்திரி அடெல் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார். #Khashoggikillers #JamalKashoggi
    ஆஸ்திரேலியாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜுலி பிஷப், வெளியுறவுத்துறை மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார். #JulieBishop
    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

    லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

    ஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், பிரதமர் பதவியில் நிலைக்க அவர் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    பிரதமர் பதவிக்கு தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என மால்கோல்ம் டர்ன்புல் அறிவித்தார். வெளியுறவு மந்திரி ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.

    அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். இதைதொடர்ந்து, ஆஸ்திரேலியா மக்கள் கடந்த பத்தாண்டுகளில் சந்தித்த ஆறாவது பிரதமராக ஸ்காட் மாரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை ஸ்காட் மாரிசன் பிரதமராக பதவி வகிப்பார் என தெரிகிறது. தனது தலைமையிலான புதிய மந்திரிசபைக்கான பட்டியலை ஸ்காட் மாரிசன் தயாரித்து வருகிறார்.

    இந்நிலையில், ஸ்காட் மாரிசனை எதிர்த்து போட்டியிட்ட ஜுலி பிஷப் வெளியுறவுத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இன்று தெரிவித்துள்ளார்.

    அடுத்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பாராளுமன்றத்தில் இனி ஆளும்கட்சி வரிசையில் அமரப்போவதில்லை. பின்வரிசையில் அமர்ந்து மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும் தெரிவித்தார்.

    இதனால், பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் பெரும்பான்மையுடன் ஊசலாட்டம் போடும் ஆளும் லிபரல் கட்சி- தேசிய கூட்டணி பெரிய பின்னடைவை சந்திக்கலாம் என கருதப்படுகிறது. #JulieBishop
    ×