என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest department Advises"

    • பருவநிலை மாற்றத்தினால் அவ்வப்போது வனப்பகுதிகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருவது என்பது தொடர்கதையாக விளங்கி வருகிறது.
    • தமிழக கேரள எல்லையான மேக்கரை - அச்சன்கோவில் செல்லும் சாலையில் உள்ள தமிழக - கேரளா சோதனை சாவடி அருகே சில தினங்களுக்கு முன்பு பகலில் சிறுத்தை ஒன்று நின்றபடி அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த வன ஊழியர்களை பார்த்துக் கொண்டிருந்துள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மிளா மான், மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் உள்ளன.

    பரவ நிலை மாற்றத்தி னால் அவ்வப்போது வனப் பகுதிகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருவது என்பது தொடர்கதையாக விளங்கி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையம் அருகே கரடி ஒன்று மூன்று பேரை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில் வன உயிரினங்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.


    சிறுத்தை

    இந்நிலையில், தமிழக கேரள எல்லையான மேக்கரை - அச்சன்கோவில் செல்லும் சாலையில் உள்ள தமிழக - கேரளா சோதனை சாவடி அருகே சில தினங்களுக்கு முன்பு பகலில் சிறுத்தை ஒன்று நின்றபடி அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டி ருந்த வன ஊழியர் களை பார்த்துக் கொண்டிருந்துள்ளது.

    இதை பார்த்த வன ஊழியர்கள் அவர்களது செல்போனில் சிறுத்தையை புகைப்பட எடுத்த சூழலில், சிறுத்தை சோதனை சாவடி நோக்கி அடியெடுத்து வைக்கவே, வன ஊழியர்கள் பாதுகாப்பு கருதி உடனே அங்கிருந்த அறைக்குள் சென்றுள்ளனர்.

    அறிவுறுத்தல்

    மேலும், பகலிலே அச்சன்கோவில் சாலையில், வன உயிரினங்கள் நட மாட்டம் அதிகம் இருப்பதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும், அச்சன்கோவில் சாலையில் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

    ×