என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Formula 1 car race"

    • இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
    • இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    'பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது.

    இதில் மெக்லரன் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்தார்.

    நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் (ரெட்புல்) 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் (மெர்சிடஸ்) 3-வது இடத் தையும் பிடித்தார்.

    பார்முலா 1' கார் பந்தயத்தின் 2-வது சுற்று சீனா கிராண்ட் பிரீ வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

    • அல்பைன் அணியின் மாற்று வீரராக இந்தியாவின் குஷ் மைனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    • பார்முலா1 கார்பந்தயத்தில் தடம் பதிக்கும் 3-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்.

    மும்பை:

    கார்பந்தயத்தில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார்பந்தயம் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான பந்தயம் மொத்தம் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதலாவது சுற்று வருகிற 16-ந்தேதி மெல்போர்னில் ஆஸ்திரேலிய கிராண்ட்பிரியுடன் தொடங்குகிறது.

    இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் களம் காணுகிறார்கள். இவற்றில் அல்பைன் அணியும் ஒன்று. இந்த அணிக்காக கார் ஓட்டும் பிரதான வீரர்களாக ஜேக் டூஹான் (ஆஸ்திரேலியா), பியரே கேஸ்லி (பிரான்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

    இந்த நிலையில் அல்பைன் அணியின் மாற்று வீரராக இந்தியாவின் குஷ் மைனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த 24 வயதான குஷ் மைனி ஏற்கனவே பார்முலா2 பந்தயங்களில் விளையாடி இருக்கிறார். இதன் மூலம் பார்முலா1 கார்பந்தயத்தில் தடம் பதிக்கும் 3-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் ஆகியோர் பார்முலா1 கார்பந்தயத்தில் பஙகேற்று இருக்கிறார்கள்.

    • பார்முலா 1 கார் பந்தயம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
    • 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தய துவக்க நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.

    கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா 1 கார் பந்தயம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தய துவக்க நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.

    இதில் பல்வேறு இசை கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ள 10 அணிகளை சேர்ந்த 20 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

    7 முறை உலக சாம்பியனான ஹாமில்டனுக்கு இந்த நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்தாண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் மார்ச் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

    பார்முலா 1 கார் பந்தயத்தின் ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடெஸ் வீரர் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். #SpainishGP #F1
    பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. ஐந்தாவது சுற்றான ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் இன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்றது. இதில் 66 சுற்றுகள் கொண்ட பந்தய தூரத்தை மெர்சிடெஸ் அணி வீரர் லெவிஸ் ஹாமில்டன் ஒரு மணி நேரம் 35 நிமிடம், 29.972 வினாடியில் கடந்து முதல் இடம் பிடித்தார்.

    மற்றொரு மெர்சிடெஸ் வீரரான வி. பொட்டாஸ் 2-வது இடம் பிடித்தார. ரெட் புல் அணியின் எம். வெர்ஸ்டாப்பன் 3-வது இடத்தையும், பெர்ராரி அணியின் வெட்டல் 4-வது இடத்தையும், மற்றொரு ரெட் புல் வீரர் ரிக்கியார்டோ 5-வது இடத்தையும் பிடித்தனர். லெவிஸ் ஹாமில்டனின் 2-வது கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    ஐந்து சுற்றுகள் முடிவில் லெவிஸ் ஹாமில்டன் 95 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 78 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்ட்டெரி பொட்டாஸ் 58 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
    ×