என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Found Dead"
- 2 தினங்களுக்கு முன்பு நிஷாந்தி பெற்றோரிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார்.
- போலீசார் நிஷாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வடவள்ளி,
கோவை வீரகேளம் பகுதியை சேர்ந்தவர் ராஜநாயுடு. இவருக்கு பத்மாவதி, நிஷாந்தி(26) என 2 மகள்கள் உள்ளனர்.
2 தினங்களுக்கு முன்பு நிஷாந்தி பெற்றோரிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நிஷாந்தியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வீரகேளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றுவதற்காக தூய்மை பணியாளர்கள் வந்தனர்.
அப்போது சாலையோரம் செல்லக்கூடிய சாக்கடை கால்வாயில் பெண் பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து வடள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சாக்கடைக்குள் பிணமாக கிடந்தது மாயமான நிஷாந்தி என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நிஷாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்க்ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் டிராண்ட் (வயது 47). இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் (41). 2010-ம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.
அவரது உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த கொலை வழக்கு லண்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது. உடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். இது மிகவும் கொடூரமானது. அவருக்கு குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டத்தில் உள்ள போடோம் பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து பிணமாக கிடந்தனர். இவர்களில் 3 பேர் வீட்டின் உள்ள அறையில் தூக்குப்போட்டும், அடுத்த பிளாட்டில் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்திலும் பிணமாக கிடந்தனர். 6-வது நபர் மாடியில் இருந்து குதித்தும் உயிரை மாய்த்து உள்ளார்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், ‘6 பேர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் அவர்கள் நடத்திய மளிகைக்கடையில் ரூ.50 லட்சம் கடன் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது’ என்றார். #Jharkhand #FamilySuicide #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்