search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraudster"

    • தனக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி.
    • தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.

    நடிகை கவுதமி, தனக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி செய்ததாக போலீசார் புகார் செய்திருந்தார்.

    அதாவது, திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்துவிடடு தனக்கு வெறும் ரூ.4.10 கோடி கொடுத்து ஏமாற்றியதாக கவுதமி புகார் அளித்திருந்தார்.

    இந்நிலையில், புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • தொழிலதிபரை ஏமாற்றி ரூ.13.5 லட்சம் மோசடி செய்த பெண் ஜிம் பயிற்சியாளர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம்,

    மதுரை

    மதுரை ஜரிகைக்கார தெருவை சேர்ந்தவர் அமீர்முகமது (வயது 37). தொழில் அதிபரான இவர் திடீர் நகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கு ஜிம் பயிற்சியாளர் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம், இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.

    இதனை நம்பிய நான் அவர்களிடம் 11 லட்சம் ரூபாயை கொடுத்தேன். இது தவிர 2.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொடுத்தேன்.

    ஆனால் ஸ்வேதா குழுவினர் ஜிம் நடத்துவ தற்கான பணிகளில் ஈடுபட வில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்வேதா, பிரியதர்ஷினி, ஸ்வேதா அத்தை, மற்றும் அவரது மகள் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் விளையாட்டு மூலம் ரூ. 42 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    • மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்தவர்.

    மதுரை

    மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் மனைவி இந்துமதி (வயது 34). இவரது மகன் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டார். அவருக்கு வாடிப்பட்டி, கட்டக்குளம் நாராயணன் மகன் மோகனசுந்தரம் என்ற சூர்யா (18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    சூர்யா இந்த நட்பை பயன்படுத்தி, ரூ.42 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்தார்.

    இதுகுறித்து இந்துமதி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரம் என்ற சூரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×