என் மலர்
நீங்கள் தேடியது "from a teenager"
- பள்ளபாளையம் அருகே உள்ள அண்ணாநகர் அருகில் வரும் பொழுது ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் கேட்டு உள்ளார்.
- தனது பின்னால் மாட்டி இருந்த பேக்கை பார்த்த போது பேக்கில் ஜிப் திறந்து இருந்தது.
பெருந்துறை
அந்தியூர் மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உத்தர சாமி. இவரது மகன் சுகாஷ் (18). இவர் சொந்த வேலையாக நேற்று காலை காஞ்சிகோவில் வந்துவிட்டு, பள்ளபாளையத்தில் இருந்து எல்லிஸ் பேட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பள்ளபாளையம் அருகே உள்ள அண்ணாநகர் அருகில் வரும் பொழுது ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் கேட்டு உள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு எல்லிஸ் பேட்டை பஸ் நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு தனது பின்னால் மாட்டி இருந்த பேக்கை பார்த்த போது பேக்கில் ஜிப் திறந்து இருந்தது.
பேக்கில் வைத்திருந்த பர்சை காணவில்லை. உடனடியாக அவர் அந்தப் பகுதியில் தேடிப் பார்க்க தான் லிப்ட் கேட்டு ஏற்றி வந்த நபர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது பர்சை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை காஞ்சி கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை விசாரிக்கையில் அவர் சித்தோடு, சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் தர்ஷன் வயது 20 என தெரிய வந்தது.
அவரிடம் இருந்து பர்ஸ் மற்றும் 1,300 ரூபாயை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக காஞ்சிக்கோயில் சப்இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.