search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "From the coming 25th"

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், தலையாம்பள்ளம்கிராம ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- வருடத்திற்கு ஆறு கிராம சபை கூட்டங்கள்ந டத்தப்படுகிறது.

    கிராம சபை கூட்டங்கள் மூலம் அரசின் திட்டங்களான மக்களை தேடி மருத்துவம்,இல்லம் தேடி கல்வி, ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம், பள்ளிகளின் செயல்பாடு உள்ளிட்டஅனைத்து திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்து கூற வேண்டும்.

    அப்போது தான் அரசு செயல்படுத்தும் திட்டங்களைபொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற முடியும், கிராமத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்துஅறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பினால் அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான திட்டங்களை எடுத்துரைத்தால்அதனை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்மூலம் 3 கோடி சாலைகளை மேம்படுத்த ரூ.1 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கலைஞரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கும்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்துமுடிக்க ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டம் வருகிற 25-ந் தேதி முதல் அனைத்து ஊராட்சி பள்ளிகளிலும் தொடங்கப்பட உள்ளது.

    அதேபோல் கலைஞரின் மகளிர்உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 -ந் தேதி அன்று தமிழக முதல் அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி,பட்டா மாற்றம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இதில் கூடுதல் கலெக்டர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×