என் மலர்
நீங்கள் தேடியது "Fruits Vegetables"
- வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல.
- காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.
வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது.
அதில் அமிலத்தன்மையும் இருப்பதால் குடல் இயக்கமும் பாதிக்கப்படும். சர்க்கரையும், அமிலத்தன்மையும் இணைந்து குடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும். அதனால் காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.
ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு வேண்டுமானால் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறுமன வாழைப்பழம் சாப்பிடாமல் ஆப்பிள் போன்ற மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறப்பானது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இயற்கையாகவே அமிலங்களும் உள்ளடங்கி இருக்கிறது. பிற பழங்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் அமிலங்களின் வீரியம் குறையும்.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்துவிடும். அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது. அதன் தாக்கம் இதயத்தில் எதிரொலிக்கும். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும்.
ஆயுர்வேதத்தின்படியும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பழங்களில் படிந்திருக்கும். அப்படி இருக்கும்போது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல.
அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலில் படிந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. அவை உடலுக்கு நன்மை தந்தாலும், எந்த நேரத்தில் எப்பொழுது எவற்றுடன் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. பழங்களை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். ஆரோக்கியத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
- கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
- வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.
வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.
1. வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.
2. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம், இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.
3. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.
4. பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.
5. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
6. வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.
7. வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.
8. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
9. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைப் குடித்தால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் ஏற்படும் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
- ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது.
- அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.
உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும் பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம். அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.
முருங்கைக்காய்:- ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
சுரைக்காய்:- உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.
உருளைக்கிழங்கு:- மலச்சிக்கலை போக்கும்.
வாழைத்தண்டு:- சிறுநீர் பாதையில் கல் அகற்றும்.
வாழைப்பூ:- மலச்சிக்கலை போக்கும்.
வாழைக்காய்:- ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
குடை மிளகாய்:- அஜீரணத்தை போக்கும்.
சவ்சவ்:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.
வெண்டைக்காய்:- மூளைவளர்ச்சியை அதிகப்படுத்தும்.
கோவைக்காய்:- வாய், நாக்கு புண்களை குணப்படுத்தும்.
சேப்பங்கிழங்கு:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.
எனவேதான், உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும்.
- கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் செய்யும் தொழிலிலும் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றிக்கொடி பறக்க விட முடியும். ஆகையால் தொழில் சார்ந்த முதலீடுகளில், உடல் சார்ந்த முதலீடும் அவசியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நமது உடலை பாதுகாக்க தேவையான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒன்றாக புரோக்கோலி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
புரோக்கோலி, இதை மார்க்கெட்டிலும், கடைகளில் பார்த்திருப்போம். ஆனால் நம்மில் பலர் அதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று இருப்போம். ஆனால் இதில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. குறிப்பாக பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, போலேட், சல்போரபேன் ஆகியனவும் இருக்கின்றன. புரோக்கோலியின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் புரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
இதய ஆரோக்கியம்
புரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான போலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
சர்க்கரை அளவைச் சீராக்கும்
கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். புரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உடலின் செரிமான சக்திக்கு உதவும். இதைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் மேம்படும்; செரிமானம் சீராகும்.
கொழுப்பை குறைக்கும்
`புரோக்கோலி, நம் உடலில் 6 சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது' என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மனஅழுத்தத்தைக் குறைக்க, இதிலிருக்கும் சல்போரபேன் பயன்படுகிறது. மனஅழுத்தத்தின் அறிகுறிகள் தென்பட்டால், சல்போரபேன் நிறைந்த இளசான புரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ரத்தச்சோகையை தடுக்கும்
நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம். இதிலிருக்கும் சல்போரபேன் உடலிலுள்ள நச்சுத் தன்மைக்கு எதிராகச் செயல்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பிரசவகால
ஆரோக்கியம் காக்கும்
பிரசவகாலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள். புரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கக்கூடியது. இதை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்.
புரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த புரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும். புரோக்கோலி தற்போது பெரும்பாலான கடைகளில் விற்பனைக்காக வருவதில்லை. இருப்பினும் இதை தேடி மார்க்கெட்களுக்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். எனவே இதையறிந்து, விற்பனை வாய்ப்புகளை உருவாக்கியும், நீங்கள் லாபம் பெற முடியும்.
- சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை.
- சரும சுருக்கங்களை குறைக்கும்.
குளிர் காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலையும், குளிர் காற்றும், குறைந்த ஈரப்பதமும் பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு வித்திடும். சரும வறட்சி, நீரிழப்பு, முகப்பரு போன்றவை எட்டிப்பார்க்கும். சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கக்கூடியவை.
1. பப்பாளி
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் பாப்பைன் என்ற நொதி நிறைந்த பழங்களுள் ஒன்று பப்பாளி. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மற்றும் சருமத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்தையும் வழங்கும் ஆற்றல் கொண்டவை. முன்கூட்டியே முதுமை பருவம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். இந்த பழம் இயற்கையாகவே உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியது. அதனால் குளிர்கால வானிலையை எதிர்த்து போராடி உடல் போதுமான வெப்பநிலையை தக்க வைத்துக்கொள்ள உதவும்.
2. மாதுளை
இந்தப் பழம் புத்துணர்ச்சியூட்டும் சக்தி கொண்டது. சரும துளைகளை போக்கவும் உதவும். சரும சுருக்கங்களையும் குறைக்கும். விரைவில் சருமம் முதுமை தோற்றத்திற்கு ஆளாகுவதை தள்ளிப்போடும். மாதுளை பழ ஜூஸ் பருகுவது சருமம் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும். சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தையும் வழங்கும். இதில் இருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி சரும வளர்ச்சிக்கு வித்திடும்.
3. அன்னாசி
இதில் புரோமைலின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை குளிர்காலத்தில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. குளிர்காலத்தில் உடலை சூடாகவும், சருமத்தை எண்ணெய் பசைத்தன்மையுடனும் வைத்திருக்க துணை புரியும். மேலும் இதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவும். சரும துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கும்.
4. கிவி
இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள், தடிப்புகள் மற்றும் தோல் அழற்சியைக் குறைக்கக்கூடியவை. சருமத்தை சுத்தம் செய்யவும் உதவக்கூடியவை. கிவியில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது வலுவான சருமத்தை உருவாக்க உதவும். மேலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க வழிவகுக்கும்.
5. வாழைப்பழம்
பொட்டாசியம், வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை வாழைப்பழத்தில் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் பளபளப்பு தன்மையை மேம்படுத்தக்கூடியவை. இறந்த செல்களை நீக்கி சருமத்தை பிரகாசமாக்கும். குளிர்காலத்தில் சரும வறட்சியை குறைத்து ஈரப் பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
6. ஆரஞ்சு
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை உட்கொள்வது சரும பாதிப்புகளை சரிசெய்ய உதவும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் சருமத்தின் இளமைப் பொலிவையும், பளபளப்பான தோற்றத்தையும் தக்கவைத்துக்கொள்ள உதவும்.
- சிலர் பழங்களை தவறான முறையில் உட்கொள்ளுகின்றனர்.
- சகல நோய்களை தீர்க்க கூடிய வல்லமை பழங்களுக்கு உண்டு.
பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது. குறிப்பாக சகல நோய்களை தீர்க்க கூடிய வல்லமை இதற்கு உண்டு.
பழங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், பிற கனிமச்சத்துக்களும் வளமான அளவில் உள்ளதால், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பெரிதும் உதவி புரிகிறது. சிலர் இதனை தவறான முறையில் உட்கொள்ளுகின்றனர். இதனால் பக்கவிளைவுகளையும் சந்திக்கின்றனர்.
இதனை மாற்றி கொண்டால் பழங்களில் இருந்து ஆரோக்கியமான முறையில் நன்மையினை பெறலாம். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பழங்களை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடாதீங்க. இது உடலில் நச்சுக்களை உருவாக்கும். ஏனெனில் பழங்களை கடினமான உணவுகளுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானமாகால் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பதோடு, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்கும்
பழங்களை இரவு தூங்கும் முன்பு சாப்பிட வேண்டாம். இதனை தூங்குவதற்கு முன்பு உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இது தவிர, இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவதால், அது அசிடிட்டியை உண்டாக்கும்.
பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரை குடிப்பது மிகவும் தவறு. பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, செரிமான மண்டலத்தின் pH அளவு அதிகரித்து, சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு அல்லது காலரா போன்ற தீவிர பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.
பலர் ஆப்பிளை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எனவே தோலுடன் சாப்பிடக்கூடிறவாறான பழங்களை தோலுடன் சாப்பிடுங்கள். அப்படி சாப்பிடும் போது உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றின் அபாயம் குறையும்.
- வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
- நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் சிறந்த மருந்தாகும்.
வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாகதான் இருக்கின்றன. அந்த வகையில் பச்சை வாழைப்பழத்தில் உள்ள நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் 'அல்சர்' ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் சிறந்த மருந்தாகும். ஏனென்றால், பச்சை வாழைப்பழத்தில் 'ஸ்டார்ச்' அதிகமாக உள்ளதால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைந்து விடும்.
ரத்தம் சம்பந்தமான பல பிரச்சினைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. குறிப்பாக, ரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்தப் பழம் உதவுகிறது. பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தினை அளித்து பற்களை உறுதிப்படுத்துகிறது.
- வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
- இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் ரசாயன கலப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு குறைபாடு காரணமாக வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
* காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு நல்ல தண்ணீரில் 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். அப்போது தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் குறையும்.
* காய்கறிகளை வெட்டிய பிறகு எக்காரணம் கொண்டும் கழுவக்கூடாது.
* கருணைக்கிழங்கு தவிர, பிற கிழங்கு வகைகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
* மாவுச்சத்து மிகுந்த, கடினமான காய்கறிகளை மட்டும் அதிக நேரம் வேக வைக்கலாம். கொடிக்காய்கள், நீர்ச்சத்து மிகுந்த காய்களை 3 அல்லது 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.
* காய்கறிகளை எண்ணெய்யில் வதக்குதல், பொரித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஈரமான பருத்தித்துணி அல்லது மண்பானை, பிரிட்ஜ் ஆகியவற்றில் காய்கறிகளை பாதுகாக்கலாம்.
* கேரட், தக்காளி, வெள்ளரி, தேங்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சமைக்காமல் பயன்படுத்த வேண்டும்.
* காய்கறிகளை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காமல் பருகலாம்.
* ஒவ்வொரு பருவகாலங்களிலும் விளையும் காய்கறிகளை மட்டும் பயன்படுத்துவது மிக சிறந்தது ஆகும்.
- மஞ்சள் காமாலை பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது
- குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும்.
'அதலைக்காய்' என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர்களுக்கும், ஒரு சில விவசாயிகளுக்குமே பரிச்சயமான ஒரு சொல் 'அதலைக்காய்'. இது பாகற்காயின் குடும்பத்தைச் சேர்ந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் தன்மை உடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள்காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இந்த காயை வாங்கிச் சென்று சமைக்க ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற காய்கறிகளைப்போல இதை நீண்ட நாட்கள் வைத்துச் சமைக்க முடியாது. நீண்ட நாட்கள் வைத்திருந்தால் தானாக முளைக்க ஆரம்பித்துவிடும். இதனால் காயின் தன்மையும், சுவையும் மாறிவிடும். காய்கறி வகைகளில் அதலைக்காய் சற்று வித்தியாசமானது. அதலைக்காய் கசப்பு தன்மை கொண்டதாக இருந்தாலும் உண்பதுக்கு ஏற்ற சுவை இருக்கும்.
கார்த்திகை மற்றும் மார்கழி மாதப் பருவத்தில் மட்டும் விளையும் காய் என்பதால், இதை வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.
பாகற்காயைப் எப்படி பொரியல் மற்றும் குழம்பு வைத்து சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை சாப்பிட வேண்டும்.
- தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
- தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது.
எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தக்காளி. இது அதிக மருத்துவ குணம் நிறைந்தது. தக்காளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...
ஊட்டச்சத்து கலவை:
தக்காளியில், வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் பி 9 போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் பைலோகுவினோன் என்றும் அழைக்கப்படும், 'வைட்டமின் கே 1' ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
எலும்பு ஆரோக்கியம்:
எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் உணவில் சேர்க்கலாம். வைட்டமின்-கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் வளமான அளவில் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
கண் பார்வை:
தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. குணப்படுத்த முடியாத கோளாறான மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை தினமும் தக்காளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.
பொலிவான கூந்தல்:
தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும், இதனால் கூந்தல் அழகாக மாறும்.
புற்றுநோய்:
இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. செல்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்டுகளும் தக்காளியில் உள்ளன. இதனால் புரோஸ்டேட் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
உடல் எடை குறைய:
தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் தக்காளி பழத்தில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் தக்காளி பழத்தை சாப்பிடலாம்.
100 கிராம் தக்காளியில்...
நீர்ச்சத்து- 95 சதவிகிதம்
புரதச்சத்து- 0.9 கிராம்
கார்ப்ஸ்- 3.9 கிராம்
சர்க்கரை- 2.6 கிராம்
நார்ச்சத்து- 1.2 கிராம்
கொழுப்பு- 0.2 கிராம்
மொத்த கலோரிகள்- 18
- இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
- குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.
நட்சத்திர பழம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் அதனை நட்சத்திர பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
குளிர் காலத்தில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக் குளம் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.
இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். அதேபோல், மழைக்கால சரும பாதிப்புகளில் இருந்து விடுபடவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நட்சத்திர பழம் உதவுகிறது. இந்த நட்சத்திர பழம் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகிறது.
- நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
- எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.
பீன்ஸ் பல உலக நாடுகளில், பல்வேறு விதமான வண்ணங்களில் விளைகிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் பீன்ஸில் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும்.
பீன்ஸ் உங்களுக்கு பிடிக்குமா...? அது சுவையில் மட்டுமல்ல, சத்து விஷயங்களிலும் சூப்பரானது. இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…!
பேப்பேசி குடும்ப,த்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பேசில்லஸ் வல்கரிஸ். செடியில் வளரும் பீன்ஸ், கொடியில் விளையும் பீன்ஸ் வகைகள் உள்ளன. புதிதாக பறிக்கப்பட்ட பீன்ஸ்கள் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும். பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.
100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும். நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க உதவும். குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கும். மிக அதிக அளவிலான வைட்டமின்-ஏ, பீன்ஸில் இருக்கிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும். குழந்தைகளுக்கு நோயை உருவாக்கும் ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கலுக்கு எதிராக செயல்படும்.
பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது. பச்சை பீன்ஸ் வகைகள் ஏ.ஆர்.எம்.டி. எனப்படும் வயது முதிர்வு சம்பந்தமான வியாதிக்கு எதிராக உடலுக்கு ஆற்றல் தரும். 100 கிராம் பீன்ஸில் 37 மைக்ரோ கிராம் போலேட்ஸ் உள்ளது. இது வைட்டமின் டீ 12 உடன் இணைந்து, டி.என்.ஏ. இணைப்பு மற்றும் செல் பகுப்பில் பங்கெடுக்கிறது. மேலும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவுகிறது. பைரிடாக்சின் எனும் வைட்டமின் பி-6, தையமின் பி-1, வைட்டமின் சி ஆகியவை பீன்ஸில் நிறைந்துள்ளது.
வைட்டமின்-சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை காக்கக்கூடியது. ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கல்ஸ் உடலில் சேரவிடாமல் சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்றத்திற்கு ரொம்பவும் அவசியமானது.
மாங்கனீசு நொதிகளின் செயல்பாட்டில் துணைக்காரணியாக செயல்படக்கூடியது. பிரிரேடிக்கல்ஸை விரட்டி யடிக்கக் கூடியது. பொட்டாசியம் தாது உப்பு செல் மற்றும் உடலில் ஈரத்தன்மைக்கு அவசியமானது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.