என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fruits"

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் பீச் ரிசார்ட் ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் செய்யும் திருவிழா நடந்தது.

    40 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை கொண்டு கலவையாக கேக் தயாரிக்க ஊற வைக்கப்பட்டது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். ரிசார்ட் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

    ஊறவைத்த கலவை 40 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.

    அந்த கேக் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வரை பரிமாறப்பட உள்ளது.

    • உணவு விரைவாக செரிமானமாக வேண்டும்.
    • உணவின் வகையை பொறுத்து செரிமான முறை அமையும்.
    உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். வயது, பாலினம், வளர்சிதை மாற்றம், உணவின் வகை உள்ளிட்டவற்றை பொறுத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொறுத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியலாளர்களின் கருத்தாக

    இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பது பற்றி பார்ப்போம்.

     தண்ணீர்

    தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் ஐந்து நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் பருகினால் அது உறிஞ்சப்படுவதற்கு சில மணி நேரமாகிவிடும்.

     ஜூஸ்

    பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். அதன் மூலம் ஆரோக்கியம் வலுப்படும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும். எந்த உணவுகளை உட்கொண்டாலும் அதனுடன் இது போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். அவைதான் செரிமான மண்டலத்திற்கு சிறந்தவை.

     பழங்கள்

    முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது. அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செரிமான செயல்முறை ஒட்டுமொத்தமாக நடைபெற்று முடிந்துவிடும். குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறுவதற்கும் உதவி புரியும். அதேவேளையில் செரிமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவுகளுடன் பழங்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

     காய்கறிகள்

    பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்களில் செரிக்கப்படும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட வேர் காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

     தானியங்கள்

    பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.

     இறைச்சி

    எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.

     பால் பொருட்கள்

    கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக5 மணி நேரம் கூட ஆகலாம். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.

     நட்ஸ்கள்-விதைகள்

    எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • மூளையை அழற்சி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
    • ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

    வானவில்லில் ஒளிரும் ஏழு வண்ணங்களை போலவே நிறத்தோற்றம் கொண்ட காய்கறிகள், பழங்களை உண்ணும் வழக்கத்தை பின்பற்றுவது `ரெயின்போ டயட்' எனப்படுகிறது. வெவ்வேறு நிறம் கொண்ட தாவரங்கள், மரங்களில் விளையும் பொருட்கள் வெவ்வேறு வைட்டமின்கள், அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை.

    சிவப்பு நிற உணவுகள்:

    தக்காளி, தர்பூசணி, கிரேப் புரூட், கொய்யா, கிரான்பெர்ரி, ஆப்பிள், டிராகன் பழம் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    பக்கவாதம், மார்பக புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க துணை புரிகின்றன.

    மஞ்சள்-ஆரஞ்சு உணவுகள்:

    கேரட், மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணி, பப்பாளி, ஆப்ரிகாட், வாழைப்பழம் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    வீக்கத்தைக் குறைக்கவும், பார்வைத்திறனை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாகவும், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவுகின்றன.

    நீலம்-ஊதா-இண்டிகோ உணவுகள்:

    நீல நிற பெர்ரி பழம், கத்திரிக்காய், கருப்பு நிற பெர்ரி, பிளம்ஸ் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    போலேட், வைட்டமின் பி நிறைந்த இந்த உணவுகள் விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை எதிர்த்து போராட உதவுகின்றன. ஞாபகத் திறனை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன. இதய நோய்கள் மற்றும் மூட்டுவலி அபாயத்தையும் குறைக்கின்றன.

    பச்சை உணவுகள்:

    பீன்ஸ், கொண்டைக்கடலை, பருப்பு, புரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    இவைகளில் போலிக் அமிலம், வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 போன்றவை நிறைந்துள்ளன. உடலில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும் உதவிபுரிகின்றன.

    இந்த உணவு ஆரோக்கியமானதா?

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, `ரெயின்போ டயட்' எனப்படும் வானவில் வண்ண உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நினைவாற்றல் இழப்பைத் தடுக்கவும் உதவுகின்றன. அத்துடன் பிளாவனாய்டுகள் நிறைந்த வண்ணமயமான உணவுகள் மூளையை அழற்சி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யும்.

    • மன அழுத்தம் வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கிறது.
    • மன நலனை சீராக பராமரிப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு.

    இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறது. சில உணவு வகைகளை அன்றாடம் உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு வித்திடும் அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். ஏனெனில் மன நலனை சீராக பராமரிப்பதில் உண்ணும் உணவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.

    வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை மன அழுத்தம் ஆட்கொள்ள வாய்ப்பிருக்கிறது. மனநிலையிலும் அதன் தாக்கம் வெளிப்படும். மனம் தெளிவின்றி தடுமாறிக்கொண்டிருக்கும். காளான், முட்டை, சோயா பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களை பெற முடியும்.

     கார்போஹைட்ரேட் கலந்த உணவு வகைகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். நரம்புத் தளர்ச்சி, கவலை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைபாடு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இவை மன அழுத்தத்துடனும் தொடர்புடையவை. முழு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவைகளில் கார்போஹைட்ரேட் அதிகம் நிரம்பி இருக்கும். அவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பீன்ஸ், சோயா, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பன்னீர் போன்ற புரதச்சத்து மிகுந்த உணவுகளையும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியவை. மன நலனை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. திராட்சை, பெர்ரி பழங்களையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

     ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு வகைகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், மனச்சோர்வு அறிகுறிகளை குறைக்கவும் உதவும். அதனால் அதனோடு தொடர்புடைய மீன் வகைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

    மதிய உணவில் வெண்ணெய் சேர்த்து கொள்வதும் சிறப்பானது. அதில் உள்ளடங்கி இருக்கும் நல்ல கொழுப்பு, மூளை சீராக செயல்பட துணைபுரியும். காளான்களும் மன நலனுக்கு நன்மை சேர்ப்பவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.

    நல்ல மனநிலைக்கு வித்திடும் உணவு பட்டியலில் வெங்காயம் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் சமையலில் சேர்ப்பது புற்றுநோயில் இருந்து காக்கவும் உதவும்.

    தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் அதிகம் உள்ளது. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. அதனால் தினமும் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பீன்ஸ் இதயத்திற்கும், மனநலனுக்கும் நன்மை சேர்க்கும். அதுவும் தவறாமல் உணவில் இடம்பெற வேண்டும்.

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம்.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி, மதுரை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 4 நாட்கள் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். மேலும் இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெயிலின் அளவு அதிக ரிக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரிக்கு மேல் இருக்கும். சேலம், ஈரோடு, தர்மபுரி, மதுரை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்கும் பழங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி, கிர்னி பழம், வெள்ளரி, நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வந்து குவிந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தர்பூசணி ஒரு கிலோ ரூ. 10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கிர்ணி பழம் கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையும், சில்ல ரையில் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளரி பிஞ்சு ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படு கிறது. 2 நுங்கு ரூ.10-க்கு விற்கப்படுகிறது. மேலும் கடைகளில் பழச்சாறுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    • ஒரு கப் தர்ப்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
    • தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

    கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து பெறுவதற்கு தர்ப்பூசணி மிகச்சிறந்த பழமாக திகழ்கிறது. தர்ப்பூசணியில் 90 சதவிகிதத்திற்கு மேல் நீர்ச்சத்து நிறைந்துஇருக்கிறது. ஒரு கப் தர்ப்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

    இதனுடைய சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசீமிக் இன்டக்ஸ்) 72 ஆகும். எனவே சர்க்கரை நோயாளிகள் தர்ப்பூசணியை மிக குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

    இதில் வைட்டமின் சி. ஏ.பி6 போன்ற ஊட்டச்சத்துக்களும், பொட்டாசியம் மெக்னீசியம் போலேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் அதிகமாக உள்ளன. மேலும் தர்ப்பூசணியில் லைக்கோபின் மற்றும் சிட்ருலின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்ஸ் இருக்கின்றன, இதில் உள்ள அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஜீரண ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது.

    தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் தோல் வறட்சி ஏற்படாமல் தடுத்து அரிப்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. தர்ப்பூசணியில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் சிட்ருலின் தசை பிடிப்பு மற்றும் தசை வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

    தர்ப்பூசணியை உணவுக்குப் பின் சாப்பிடுவதை விட இடைப்பட்ட உணவாக (ஸ்நாக்ஸ்) உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 150 கிராம் மிகாமல் தர்ப்பூசணி உட்கொள்ளலாம் பொதுவாக பழங்களை இயற்கையாக உண்ணுவது ஜூஸ் வடிவில் குடிப்பதை விட நல்லது.

    • தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது.
    • ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், நடுத்தர வயது பெண்கள் அழகாக இருக்க பல மேக்கப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

    மேக்கப் பொருட்கள் தினமும் பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் சில நேரங்களில் சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேக்கப் இல்லாமல் அழகான தோற்றத்தை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    * ஆரோக்கியமான சருமத்தை அடைய தினசரி உணவில் சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

    * தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது. அதிக தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

    * அன்றாடம் ஆரோக்கியமான உணவை சேர்த்துக்கொள்வதுடன் இரவு தூக்கமும் சரும அழகிற்கு உதவுகிறது. தினமும் 6 முதல் 8 மணிநேர உறங்குவதால் காலையில் புத்துணர்ச்சி ஏற்படும்.

    * சருமத்தை எரிச்சலூட்டும் அல்லது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இயற்கை பொருட்கள் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.

    * உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. உடற்பயிற்சி சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, தோற்றத்தை மேம்படுத்துகிறது.

    * சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க, ஒவ்வொரு நாளும் சருமத்திற்கு ஏற்ற பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும். ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உறங்கும் முன் தோலை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். 

    * சன்ஸ்கிரீனை கோடையில் மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை. வருடத்தின் அனைத்து காலங்களிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். சன்ஸ்கிரீம் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை தடுக்கிறது.

    * மன அழுத்தமே முடி உதிர்தல், முடி நரைத்தல், முகப்பரு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் தியானம், இசையை கேட்பது, பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

    • அரைத்ததை டம்ளரில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிரூட்டவும்.
    • சாப்பிடுவதற்கு முன் பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    மாம்பழம் - 1

    பால் - 1/4 கப் (பாலுக்கு மாற்றாக தேங்காய் பால் (அ) ஊற வைத்து அரைத்த பாதாம் விழுது பயன்படுத்தலாம்)

    தயிர் - 4 ஸ்பூன்

    சர்க்கரை - 3 ஸ்பூன்

    தேன் - 2 ஸ்பூன்

    ஏலக்காய் - சிறிதளவு

    பாதாம், முந்திரி துருவியது

    செய்முறை:

    மிக்சியில் மாம்பழத்தை துண்டுகளாக்கி சேர்க்கவும். அதனுடன் பால் அல்லது தேங்காய் பால் சேர்க்கவும்.

    பின்னர் சர்க்கரை, தயிர், தேன் சேர்த்து கலக்கவும். அதனுடன் ஏலக்காயை தூளாக்கி போடவும். அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.

    அரைத்ததை டம்ளரில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிரூட்டவும். சாப்பிடுவதற்கு முன் பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும். கோடையில் குழந்தைகள் விரும்பும் சுவையான மாம்பழ ஸ்மூத்தி ரெடி. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை.
    • கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    நாம் அன்றாட வாழ்வில் இப்போது இருக்கும் வேலை பளுவால் ஈஸியா என்ன சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிட தொடங்கிவிட்டோம். ஆனால் அப்படி அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவதால் நமக்கு சுவை என்னமோ நல்லாதான் இருக்கும்.. ஆனால் உடலுக்கு அத்தனையும் கேடு விளைவிப்பதாக இருக்கிறது.

    இதனால் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், உப்பு சார்ந்த நோய்கள் இப்போ அதிகபடியாக பெருகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன், இதயம் சார்ந்த நோய்கள், கேன்சர் என பல்வேறு விதமாக உடல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகுகிறார்கள்.

    சரி ஹோட்டல்ல சாப்பிட்டா தான் இப்படி ஏகப்பட்ட நோய்கள் வருது.. அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவோம் என்று கிளம்பினாலும் இப்படிதான் ஆகிறது.


    ஆமாம்... நாம் எந்த அளவுக்கு எண்ணெய், உப்பு, சர்க்கரை என அதிக சுவையூட்டும் உணவுகளை எடுத்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் நோய்களுடன் வாழ்கிறோம் என்று தான் அர்த்தம்.

    இப்போதெல்லாம் சிறு வயதிலேயே டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பிசிஓஎஸ், பிசிஓடி பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடுகிறது. இதை ஐசிஎம்ஆர், என்ஐஎன் ஆகிய சுகாதார அமைப்புகள் உணவின் வழிகாட்டி என்ற கருத்துகணிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர்.

    நாம் அன்றாடம் வேக வைத்த காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய பயறு வகைகள் நாம் எடுத்து கொள்வதால் உடல் சார்ந்த நோய்களில் இருந்து விலகி இருக்கலாம்.


    நான் ஸ்டிக் பாத்திரங்கள் அடி பிடிக்காது, விரைவில் சமைக்கக் கூடியது, குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக polytetrafluoroethylene (PTFE) என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உடலுக்கு அதிக பாதிப்புக்களை தருகிறது. கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இன்றைய நவீன நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து இல்லாதவை என்று கூறப்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறையைப் பொருத்தே உள்ளது.

    இது போன்ற உணவு பழக்கங்களில் இருந்து நாம் எப்படி மாறுவது என்றால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண்சட்டி சமையல் முறையில் சமைத்து சாப்பிடலாம். அதுமட்டுமல்ல, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக நமது உடலுக்கு கிடைக்கிறது.


    காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை. ஆதலால் அரைபதம் வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

    நமக்கு வரும் நோய்களுக்கு நாம் தான் காரணமாக இருக்கிறோம். நமது சந்ததியும் இதையே பின்பற்றுவதால் அவர்களுக்கும் சிறு வயதிலேயே பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறன. ஆகவே நமது அடுத்த தலைமுறையை காப்பாற்றுவது தமது கையில் தான் உள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மகத்துவத்தை அவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூற நாம் கடமைபட்டிருக்கிறோம்.

    • நாக தீபம் - உயர் பதவி விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்
    • கொடி தீபம் - செல்வ மேன்மை மயூர தீபம் - மக்கட் பேறு

    கோவில்களில் இறைவனுக்கு ஷோடச தீபாராதனை என்னும் 16 வகையான தீப- தூப ஆராதனைகளைச் செய்வார்கள். அந்த ஆராதனைகளையும், அவற்றால் கிடைக்கும் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    1. தூபம் - உற்சாகத்தை அளிக்கும்

    2. தீபம் - விழிப்பு தரும்

    3. மகா தீபம் - அரச போகம்

    4. நாக தீபம் - உயர் பதவி

    5. விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்

    6. புருஷாமிருக தீபம் - நோய் நீங்கும்

    7. சூல தீபம் - ரோக நிவர்த்தி

    8. ஆமை தீபம் - தண்ணீர் பயம் நீங்குதல்

    9. கஜ தீபம் - செல்வம் கிடைக்கும்

    10. வியாக்ர புயி தீபம் - துஷ்ட நிவர்த்தி

    11. சிம்ம தீபம் - ஆயுள் விருத்தி

    12. கொடி தீபம் - செல்வ மேன்மை

    13. மயூர தீபம் - மக்கட் பேறு

    14. பூரணகும்ப தீபம் - சாந்தி, மங்களம் உண்டாகும்

    15. நட்சத்திர தீபம் - உலகாளும் திறமை

    16. மேரு தீபம் - மேலான நிலையை அடையலாம்.

    • டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
    • டைப் 2 நீரழிவுநோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும்.

    இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நீரழிவு நோய் பற்றிய போதுமான புரிதல் இல்லாதது நோயை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயின் அறிகுறிகுறிகள் குறித்து முதலில் விழிப்புணர்வடைவது அவசியம்.

    உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும் அளவுக்கு இன்சுலின் சுரக்க முடியாது. இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது, டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.

     

    டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. சமீப காலமாக, உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடமும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. டைப் 1 நோய் மரபணு ரீதியாக அடுத்த தலைமுறைக்கு பரவும் நிலையில் டைப் 2 வாழ்க்கை முறைகளாலும் உணவுப் பழக்கத்தாலும் ஏற்படுகிறது.

    டைப் 2 நோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும். உங்களது. உங்களது மூச்சில் பழத்த்தின் வாசனையை அடிக்கடி நேரிட்டால் அது டைப் 2 நீரழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

     

     ஆரம்பத்தில் கூறியபடி ரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸை சமன் செய்ய கெடோஆசிடோசிஸ் (ketoacidosis) என்ற செயல்பாடு உடலில் நடப்பதால் மூச்சில் இந்த பழ வாசனை உருவாகிறது. இந்த டைப் 2 சர்க்கரை வியாதி இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×