என் மலர்
நீங்கள் தேடியது "FULL BODY CHECKUP"
- திருச்சி மதுரம் மருத்துவமனை சார்பில் கிறிஸ்தவ கூட்டமைப்புடன் சேர்ந்து முழு உடல் பரிசோதனை முகாமை நடத்தியது
- முகாமில் பொதுமக்களுக்கு அனைத்து விதமான ரத்த பரிசோதனை, பல் பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
திருச்சி:
திருச்சி மதுரம் ஆஸ்பத்திரி மற்றும் அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் முழு உடல் பரிசோதனை முகாம் மதுரம் ஆஸ்பத்திரியில் நடந்தது.
முகாமிற்கு திருச்சி மதுரம் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐவன் மதுரம் தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் வில் ப்ரெட் எடிசன், செயலாளர் ஜோசுவா விக்டர், பொருளாளர் ஜான் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போஸ்தலர் ஜேம்ஸ் துரைராஜ், பாதிரியார்கள் பிரசாத் தேவ சித்தம், டேனியல் தனபால் ஆகியோர் பிரார்த்தனை செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பாதிரியார்கள் பங்கேற்றனர்.
முகாமில் பொதுமக்களுக்கு அனைத்து விதமான ரத்த பரிசோதனை, பல் பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் டிஷோன் பிரபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் ஜான் ரெஜிஸ், பகுதி தலைவர் பெலிக்ஸ் மற்றும் அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பின் தாலுகா தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.