search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Full Resolution"

    • அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்றதாகும்.
    • சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    மயிலாடுதுறை காவிரி தென் திசையில் ஸ்ரீ மயூரநாதர் கோயிலும், வடக்கு திசையில் ஸ்ரீவதான்யேஸ்வரர் கோயிலும் ஐயாரப்பர் கோயில் புனுகீஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் படித்துறை விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்கள் ஆகியவற்றில் ஐப்பசி மாதம் கடைசி பத்து நாட்கள் விழா நடைபெறும்.

    கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கிய உற்சவம் திருக்கல்யாணம், தேர், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நிறைவுற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி நேற்று மதியம் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் அனைத்து கோயில்களில் இருந்து சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதற்காக நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்திருந்தனர்.

    ×