search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fund relief"

    • ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.
    • முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர்.

    திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் முஜிப். இவர் ரவுண்டு ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட்டு மாதம் 7ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தனது ஓட்டலில் மொய் விருந்து நடத்தினார்.

    ஓட்டலுக்கு வந்தவர்களுக்கு அசைவ உணவு வழங்கியதுடன் விருந்தில் பங்கேற்பவர்கள் தங்களால் இயன்ற நிவாரண தொகையை இலைக்கு அடியில் வைத்து செல்லுமாறு கூறினார். இதனை ஏற்று மொய் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்று உதவிகள் அளித்துச் சென்றனர். இதில் ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.

    இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.3.30 லட்சம் நிதியை முஜிப் மற்றும் ஓட்டல் அசோசியேசன் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர் கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயனை நேரில் சந்தித்து ஆகஸ்ட்டு 14-ந் தேதி வழங்கினர்.

    அவரது இந்த சேவையை பாராட்டும் வகையில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர். அவர்களை ஓட்டல் உரிமையாளர் முஜிப் வரவேற்றார்.

    மாநிலம் கடந்தும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய முஜிப்பை அவர்கள் பாராட்டி நினைவு பரிசு மற்றும் கேரள பாரம்பரியம் கொண்ட கேடயத்தை வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் தனது ஓட்டலில் முஜிப் தலைவாழை இலை விரித்து பிரியாணி மற்றும் பல்வகை அசைவ விருந்து வழங்கினார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.
    • வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.

    டெல்லியில் யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழை குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

    சில கும்பங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.

    மேலும், உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

    யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ் மோதியது.

    இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உயிரிழந்த அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், லெட்சம்பட்டி பிரிவு ரோடு மணப்பாறை வட்டம், வையம்பட்டி கிராமம் அருகே, திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (25-6-2023) மாலை திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த மணப்பாறை வட்டம், கே.உடையாப்பட்டியைச் சேர்ந்த திரு. முத்தமிழ்செல்வன், த/பெ.முத்துசாமி (வயது 40), திரு ஐயப்பன், த/பெ.இரவிச்சந்திரன் (வயது 35) திரு.மணிகண்டன், த/பெ.கணேசன், மணப்பாறை வட்டம், ஆலிப்பட்டியைச் திரு.நாகரத்தினம், த/பெ.பப்பு மற்றும் தோகைமலை வட்டம், பில்லூரைச் சேர்ந்த திரு. தீனதயாளன், த/பெ.செல்வராஜ் (வயது 19) ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும்.

    தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் என ஏற்கெனவே விதி உள்ளது. இதேபோல், பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவராணம் வழங்கவும் விதி உள்ளது.

    மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். தமிழகத்தில் மழை பாதிப்புகளால் கடந்த சில நாட்களில் 2 பேர் இறந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் இரங்கல்.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள கலம்பெல்லா என்கிற கிராமம் அருகே இன்று அதிகாலையில் டெம்போ ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்கள் ரெய்ச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளர்கள் என்றும், இவர்கள் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடி இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து நெஞ்சை உருக்குகிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பிரதமர் நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000ம் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×