என் மலர்
நீங்கள் தேடியது "Gambled with"
- விளையாடி வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
- அவர்களிடம் இருந்த ரூ.5,350 ரொக்க பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையிலான போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அலாவுதீன்(45), கலைஞர் நகரை சேர்ந்த சபரி(25), பெரியசேமூரை சேர்ந்த சேகர்(50), பெரியமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பொன்னுசாமி(51), நாடார்மேட்டினை சேர்ந்த பாலகிருஷ்ணன்(41), மணல்மேட்டினை சேர்ந்த சண்முகம்(58) ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.5,350 ரொக்க பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.