search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gambling gang"

    • கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது.
    • ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

    கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது. மருந்தாளுனர் பூவழகன் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பலை காவல்துறை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது.
    • நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், கொம்பேறிபட்டி, புத்தூர், கோம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடைபெற்று வந்தது. திருவிழா காலங்களில் ரங்கர்கட்டை உள்ளிட்ட சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து பைனான்சியர்கள் வந்து நிதிஉதவி அளிக்கின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசாரின் தீவிர நடவடிக்கையால் சூதாட்டம் ஒழிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கு தெரியாமல் ரகசியமாக கிராமங்களில் உள்ள தோப்புகளில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பணத்தை இழந்து குடும்பத்தில் பிரச்சிைன ஏற்பட்டு வருகிறது. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேனி அருகே உப்பார்பட்டி பகுதியில் வீரபாண்டி போலீசார் ரோந்து சென்றனர்.
    • சூதாடிய 3 பேரை கைது செய்து சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே உப்பார்பட்டி பகுதியில் வீரபாண்டி போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கிருந்த காலி இடத்தில் சூதாடிய கணேசன்(62), அமர்நாத்(35), விமல்குமார், மாரிமுத்து(46) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர். இதேபோல் கண்டமனூர் போலீசார் எம்.சுப்புலாபுரம் பெரியஓடை பகுதியில் ேராந்து சென்றனர்.

    அப்போது அங்கு சூதாடிய சரவணராஜா(41), சுப்பிரமணி(67), மகாராஜன்(46) ஆகிய 3 பேரை கைது செய்து சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ×