என் மலர்
நீங்கள் தேடியது "gambling with money"
- ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
- அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புஞ்சை புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி ஆதிபரா சக்தி கோவில் அருகே செயல்படாமல் உள்ள தனியார் நூல்மில் குடோனில் சூதாட்டம் நடைபெறுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவயிடம் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த இம்தியாஸ், தனசேகர், அமீர், ஜான் தேவராஜ், கண்ணன், கோகுல், ராஜேஷ்குமார், சசிகுமார் ஆகிய 8 பேர் என்பதும், இவர்களை சூதாட மில் காவலாளி பிரகாஷ் அனுமதித்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரம், 10 செல்போன்கள், 4 மோட்டார்சைக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- சூரம்பட்டி போலீசார் சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
- இதையடுத்து 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு, பாரதிபுரம், மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த கார்த்திக் (34), சூரம்பட்டி வலசை சேர்ந்த தங்கராஜ் (50), அதேபகுதியை சேர்ந்த குமார் (38), மூர்த்தி என்ற வெங்கடாச்சலம் (42), வீரப்பன் (52) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.450 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் காரிய காளியம்மன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சத்தியமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
இதில் செண்பகபுதூரை சேர்ந்த முத்துசாமி(73) என்பவரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து முத்துசாமியை கைது செய்து தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற 7 மோட்டார் சைக்கிள்கள் ரூ.9 ஆயிரம் ரொக்கம், சீட்டுக்கட்டு க்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
- கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
- இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள முள் புதர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொடுமுடி, சாலைப்புதூரை சேர்ந்த மகேஷ்வரன் (33), பெரியசாமி (37), நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (49), தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்த நவமணி (53), இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் (44) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.1,200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல பர்கூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பர்கூர் அருகே உள்ள துருசனம் பாளையத்தில் கெஞ்சேகவுடர் என்பவரது வீட்டின் முன் தெருவிளக்கின் கீழ் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முருகன் (27), மாதேவன் (37), சிவலிங்கம் (28), தேவராஜ் (30), பரமேஸ் (30), நாகராஜ் (35), தேவராஜ் (28) ஆகிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.4,900 ஆகியவற்றையும் பர்கூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி:
பவானி மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மைலம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (34), சரவணன் (31), ஒலகடத்தை சேர்ந்த பூபதி (28), பாலன் (32), கண்ணடிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (34) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.
- ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள சவண்டப்பூர், ஆண்டிகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), முருகன் (28), சி.ஆறுமுகம் (56), சண்முகம் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் 52 மற்றும் பணம் ரூ. 570 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர்.
- சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கே.ஆர்.பாளையம் முத்து கவுண்டர் வீதியை சேர்ந்த கந்தசாமி(47), அதேபகுதியை சேர்ந்த செல்லதுரை (45), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல் (49), பள்ளிபாளையம் எக்கட்டூர் செந்தில்குமார் (43) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.3,100 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
- 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
- போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒங்கன்புரம் மற்றும் மரூர் பகுதியில் 10 பேர் கொண்ட 2 குழுவினர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒங்கன்புரம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் தாளவாடி பகுதியை சேர்ந்த விஜய குமார் (40), பசுவராஜ் (30), சித்துராஜ் (25), அருள்ராஜ் (26), மாதேஷ் (50) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்த இருசக்கர வாகனங்கள், 52 சீட்டுகள், பணம் ரூ.1,000 ஆகியவ ற்றையும் பறிமுதல் செய்த னர்.
இதேபோல் மரூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாளவாடி பகுதியை சேர்ந்த பசுவராஜ் (35), நசீப் (52), சிவராமு (35), சிவகுமார் (41), நந்தேஷ் (47) ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள், பணம் ரூ.52 ஆயிரத்து 60 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
- தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
ஈரோடு:
தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தாளவாடி அடுத்த சீமாச்சிகளி என்ற இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த நஞ்சைய்யா (60). சிதம்ஆலப்பா (50), கல்வீரப்பா (52), மாதேஷ் (37) ஆகியோர் என்பது தெரிவந்தது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ. 7000, சீட்டு கட்டு, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி திரு.வி.க. தெருவில் உள்ள பெருமாள் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக சிவகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.
இதில் அவர்கள் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த கார்த்தி (38), பாரதி தெருவை சேர்ந்த வாசுதேவன் (49), விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோ (49), லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சுகராஜ் (37), காந்திஜி தெருவை சேர்ந்த அருணாச்சலம் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டு, ரூ.2,480 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
- 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
- போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மணல் மேடு பகுதியில் சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்த 3 பேர் தப்பியோட முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (28), காசிபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் (56) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ.130 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
- இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம், சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த பழனிசாமி (52), கணேசன் (31), ஒட்டபாளையம் அய்யண்ணார் (48), முனுசாமி (52), கண்ணையன் (48) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.530 ரொக்கம் மற்றும் சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- ஒரு கும்பல் சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
- போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே பணிக்கம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணிக்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு ஒரு கும்பல் சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தின்.
விசாரணையில் அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்த சுகுமார் சர்தார் (24), பிரோசெஸ்திரா (24), அருண் காயல் (28), சானு ஹால்டர் (28), சாந்தனு குமார் ஆரி (26), நித்யானந்தா போன்டல் (32), சுகுமார் (25), மந்தும் சர்தர் (30) ஆகிய 8 பேர் என தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.700 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.