என் மலர்
நீங்கள் தேடியது "Gandhigram university"
- பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக் கழகத்தில் செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
- விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளமான ஹெலிபேடு, அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதைக்கான வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல்-மதுரை4 வழிச்சாலையில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், தமிழக அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக் கழகத்தில் செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளமான ஹெலிபேடு, அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதைக்கான வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
தற்போது பல்நோக்கு அரங்கத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பால்சீலிங் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அரங்கத்தில் மேற்கு பகுதியில் விழாவில் பங்கேற்பவர்களுக்கான தனி பந்தல்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் மற்றும் முக்கிய அலுவலகங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விழாவிற்கு வரும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் விழா மேடையில் இடம்பெற வேண்டிய பேனர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
பட்டமளிப்பு விழா நடைபெறும் 11ம் தேதியன்று பல்கலைக் கழக நுழைவாயில் முன்பு முதல் வளாகம் முழுவதும் பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். அன்றைய தினம் பல்கலைக் கழக வளாகத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
- கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு 2018-2019, 2019-2020-ம் ஆண்டு பட்டம் முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா நடத்தி சென்றுள்ள நிலையில் தற்போது காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக உறுதியான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இன்னும் ஓரிருநாளில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.
ஜனாதிபதியாக பதியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்திற்கு குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளதால் மாணவ-மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காந்திகிராம பல்கலை க்கழகத்தின் வேளாண் அறிவியல் மைத்துக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் மண்டல அளவில் 2ம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது.
- விவசாயிகளின் வருானத்தை உயர்த்தவும் செயல்விளக்கம், ஆலோசனைகளை இந்த மையம் வழங்கி வருகிறது.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலை க்கழகத்தின் வேளாண் அறிவியல் மைத்துக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் மண்டல அளவில் 2ம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், புதுச்சேரி, யூனியன் பிரதேசத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் மையங்களை ஐதராபாத்தில் உள்ள வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி பண்பாட்டு நிறுவனம் கண்காணித்து வருகிறது.
இந்நிறுவனமும் தமிழ்நாடு வேளாண் பல்கலையும் இணைந்து வேளாண் அறிவியல் மைய செயல்பாடு கள் குறித்து ஆய்வு கூட்டத்தை கோவையில் நடத்தின.
இதில் காந்திகிராம பல்கலையும், வேளாண் அறிவியல் மையத்துக்கு மண்டல அளவில் 2-ம் இடம் கிடைத்துள்ளது. விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருானத்தை உயர்த்தவும் செயல்விளக்கம், ஆலோசனைகளை இந்த மையம் வழங்கி வருகிறது.
மையத்தின் செயல்பா டுகள், விவசாயிகளின் வெற்றி கதைகளை ஆவணப்படுத்துதல், சுழல் நிதி உற்பத்தி போன்ற வற்றுக்காக இந்த வருது வழங்கப்பட்டது. வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி இதற்கான விருதினை வழங்கினார்.
வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வெங்கட சுப்பிரமணியன், வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார்.
- மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார்.
திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலை பல்கலைகழக மாணவர்களிடம் சமஸ்கிருதம் படிக்க சொல்வதாகவும், திராவிடம் குறித்து இழிவாக பேசுவதாகவும் பேராசிரியர் ரங்கநாதன் மீது மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
சுகாதார ஆய்வாளருக்கான பயிற்சி வழங்கும் பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார் என்றும் அவர் ஒரு வாட்சப் குழுவை ஆரம்பித்து மாணவர்களை அதில் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவான பதிவுகளை பகிர்ந்து வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார். அதில் புகாரில் உண்மை இருந்ததால் பேராசிரியர் ரங்கநாதனை ஆறு மாதம் விருப்ப ஓய்வில் செல்ல துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞர்களுக்கு 3 நாள் தேசியப் பயிலரங்கம் நடைபெற்றது.
- பயிலரங்கத்தில் பலர் கலந்து கொண்டனர்.
சின்னாளபட்டி:
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் உள்ள ஆராய்ச்சி அறிஞர்களுக்கு 3 நாள் தேசியப் பயிலரங்கம் நடைபெற்றது.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பயன்பாட்டு ஆராய்ச்சி மையப் பேராசிரியர் மற்றும் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் (கூடுதல் பொறுப்பு) பேராசிரியர் டாக்டர் குர்மீத் சிங் தனது தொடக்க உரையில், தொற்றுநோய்களில் பயன்பாட்டு உளவியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
சுகாதார அறிவியல் மற்றும் ஊரக வளர்ச்சிப் பள்ளியின் பேராசிரியர் மற்றும் புலத்தலைவர் ராஜா, சமீபத்திய ஆராய்ச்சிக் கருவிகள் மற்றும் நுட்பங்களுடன் ஆராய்ச்சி அறிஞர்களை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டாக்டர் விஜயபிரசாத் கோபிச்சந்திரன் மற்றும் டாக்டர் சுதர்ஷினி சுப்பிரமணியம் ஆகியோர் உடல்நல ஆராய்ச்சியில் அப்ளைடு சைக்கோமெட்ரிக்ஸ் குறித்து விரிவுரைகளை வழங்கினர்.
இணைப் பேராசிரியர் ஹிலாரியா சவுந்தரி நன்றி கூறினார். முத்துக்குமரன், கார்த்திக் குணசேகரன் ஆகியோர் அப்ளைடு சைக்கோமெட்ரிக்ஸ் குறித்த இந்த பட்டறையின் பயனுள்ள கற்றல் செயல்முறையை விளக்கினர்.
- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தில், வாழ்நாள் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை சார்பில் தட்டச்சு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது
- பல்வேறு துறைகளில் பயின்று வரும் 150 மாண வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
சின்னாளபட்டி:
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தில், வாழ்நாள் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை சார்பில் தட்டச்சு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதனை திறன் வளர்ப்பு பயிற்சியாக ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை சிறப்பாக நடத்தி வருகிறது. பயிற்சியின் நிறைவாக தமிழக அரசு நடத்தும் தொழில் நுட்ப கல்வி தேர்வில் பங்கேற்று அரசு சான்றிதழை பெறுகின்றனர். இந்த பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.
இந்தாண்டிற்கான பயிற்சி வகுப்பினை திறன் மேம்பாட்டு மைய மேலாளர் சுகன் சின்ன மாறன் தொடங்கி வைத்தார். அவர் விழாவில் உரையாற்றிய போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பல்வகைத் திறன் பயிற்சி பற்றி எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழக பதிவா ளர் சிவக்குமார், பேராசிரி யர் ராஜா, வெங்கடேசன், ரமேஷ், ஞானசரண்யா, ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்று வரும் 150 மாண வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
- காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
- விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
சின்னாளப்பட்டி:
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை சார்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு பாராட்டு விழா, பாரதி ஆய்வு நூலகம் திறப்பு விழா, மகாகவி பாரதியாரின் 101வது நிைனவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் இணையவழியில் கலந்து கொண்ட பல்கலைக்கழ கத்தின் பொறுப்பு துணை வேந்தர் குர்மீத்சிங் தலைமை தாங்கி பேசியதாவது:-
மிக குறைந்த வயதில் மரணமடைந்து நீண்ட காலம் மக்கள் மனதில் பாரதியார் வாழ்ந்து வரு கிறார். அவரது கருத்துக்கள் தேச முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியது. அதனை தற்கால இளைஞர்கள் கண்டிப்பாக அறிந்து கொண்டு அதனை பின்பற்ற வேண்டும்.
அவரது கருத்துக்களை இளைஞர்களிடம் பதியச் செல்வது ஒவ்வொரு பேராசிரியர்களின் கடமை யாகும். மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்துறை இணை பேரா சிரியர் ரவிக்குமார் பாரதி ஆய்வு நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றி னார். பாரதியார் ஆசிரியர், குரு ஆகிய நிலைகளின் தன்னை கருத்திக் கொண்டு மக்களுக்கு பல்வேறு சமுதாய சீர் திருத்த கருத்துக்களை தெரிவித்தார். அறிவியல் கருத்துக்களை தமிழ் கவிதையில் விரிவாக, நுணுக்கமாக பாடிய கவிஞர் பாரதிக்கு முன்னாலும் இல்லை. பின்னாலும் இல்லை.
பிற மொழிகளில் கூட இத்தகைய முன்னு தாரணமான கவிஞரை காண முடியாது. பாரதியார் இலக்கியம், அரசியல் என்ற 2 தலங்களிலும் சிறப்பாக செயல்பட்டார். அவர் இலக்கிய தலத்தில் மட்டும் செயல்பட்டிருந்தால் இன்னும் பல அரிய அற்புதங்களை படைத்தி ருப்பார். பாரதியார் கவிதைகள் காலம் கடந்து புதிய வாசிப்புக்கு உரியதாக விளங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் சாமுவேல் சதானந்தா, பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் அலிபாபா, சென்னை கிறிஸ்துவ கல்லூரி தமிழ்துறை தலை வர் பாரதி புத்திரன், எழு த்தாளர் வேணு கோபால், பேராசிரியர்கள் ஆனந்த குமார் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூயில் கடந்த நடைபெற்ற மாநில அளவிலான பொருளாதார விழாவில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சின்னாளபட்டி:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூயில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற மாநில அளவிலான பொருளாதார விழாவில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக இளங்கலை பொருளியல்துறை மாணவர்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் நடைபெற்ற போட்டிகளில் காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் வினாடி வினா, செவ்வியல் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் ஜெயசுருபா, மவுலீஸ்வரன் மற்றும் சக்தி ரேஷ்மா முதல் பரிசும், விஜயலட்சுமி ஆங்கிலக் கட்டுரை போட்டியில் 2-ம் பரிசும் வென்றனர். ஓட்டுமொத்த போட்டிகளில் காந்திகிராம பல்கலைக்கழகம் 2-ம் இடம் பெற்றது. பேராசிரியர்கள் சதீஸ்வரன், கொடியரசு ஆகியோர் மாணவர்களை இப்போட்டிகளுக்காக தயார் செய்து வழி நடத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார், துறைத்தலைவர் நேரு, பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.