என் மலர்
நீங்கள் தேடியது "ganja seller"
- சுற்றுலா பயணிகளை குறிவைத்து சில சமூக விரோத கும்பல்கள் போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போதை காளான் விற்றவரை கைது செய்து போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை குறிவைத்து சில சமூக விரோத கும்பல்கள் போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்த போதும் தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், முதல் நிலைக் காவலர்கள் காசிநாத், சரவணக்குமார் ஆகியோர் அடங்கிய போதைப்பொருள் தடுப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டி ருந்த விஜய்பாபு என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கொடைக்கானல் இன்ஸ்பெ க்டர் பாஸ்டின்தினகரன் அவரை கைது செய்தார். மேலும் போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.