என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garbage on fire"

    • குளத்தின் அருகில் தற்காலிக ஏற்பாடாக சுற்றுவட்டார பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.
    • இதனால் குப்பைகள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே உள்ள குளத்தின் அருகில் தற்காலிக ஏற்பாடாக சுற்றுவட்டார பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை மர்ம ஆசாமிகள் யாரோ குப்பைகளை தீ வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் குப்பைகள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து உடனடியாக மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் பேரில் ஆணையர் உடனடியாக திருபுவனை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
    • 3 மணி நேரம் எரிந்து தானாக அணைந்தது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஏலகிரி மலை அடிவாரத்தில் சின்ன பொன்னேரி கிராமம் உள்ளது.

    இங்குள்ள நியூ காலனி பிளாட் அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள், 2 டன் குப்பைகளை வாகனம் மூலம் ஏற்றி வந்தனர்.மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள இடத்தில், குவியலாக கொட்டி தீ வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. அந்த பகுதி முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்களில் எரிச்சலை உண்டாக்கியது. மேலும் அங்கு குடியிருக்கும் முதியவர்கள், குழந்தைகள் என பொதுமக்கள் நெடி தாங்க முடியாமல் மூச்சுத் திணறால் அவதிப்பட்டனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ தானாகவே அணைந்தது.

    எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டி எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×