என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Garnish"
- முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நடந்தது.
- முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராத னைகள் நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால் பிரிவு கிராமத்தில் உள்ள செல்வ முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் செல்வ முருகனுக்கு அபி ஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பங்குனி உத்திர விழா நடந்தது. இதையொட்டி காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலுக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் வள்ளி- தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது
இதைத்தொடர்ந்து முருக பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சுவாமி-அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்த னர். மதியம் கோவிலில் நடைபெற்ற அன்னதா னத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு உற்சவர் செல்வமுருகன் மயில்வாகனத்தில் புறப்பாடாகி கால்பிரிவு வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் முருகனை வரவேற்று பூஜை நடத்தி வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகி முருகேசன் செய்திருந்தார்.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காப்புக் கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கோவிலில் தீமிதித்து வேண்டுதல் நிறை வேற்றினர்.
இதைத்தொடர்ந்து பால முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராத னைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பால முருகனை தரிசனம் செய்த னர்.
மானாமதுரையில் புறவழிச்சாலையில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத வழிவிடு முருகன் கோவிலில் நடை பெற்ற பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலையில் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் மூலவருக்கும் உற்ச வருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு வழிவிடு முருகன் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிவிடு முருகனை தரிசனம் செய்தனர். இரவு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
தாயமங்லம் ரோட்டில் உள்ள பாம்பன்சுவாமி கோவில், கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோவில், குறிச்சி செந்தில் ஆண்டவர் மற்றும் திருப்புவனம், இளை யான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோவில் களிலும் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
- வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
- 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், பெத்தார்ண சாமி கோவில் கும்பாபிஷேம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள், மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பெரியநாயகி மூலமந்திர பிரயோக ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.
பின்னர் மஹா பூர்ணாஹதி கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து பெரிய நாயகி அம்மன், பெத்தார்ண சாமி ஆகிய சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோதண்டராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்