search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas attack"

    • பொதுமக்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
    • போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு பரவி வீடுகளில் இருந்த கழிவறைகளுக்கு சென்ற செந்தாமரை, காமாட்சி, செல்வராணி ஆகிய 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    3 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்பினர் சட்ட சபை முன்பு இந்த பிரச்சினையில் கவனக்குறை வாக செயல் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகர் சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் அங்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் இரு புறமும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    தகவல் அறிந்தரெட்டியார் பாளையம் போலீசார் மற்றும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

    பாதாள சாக்கடை திட்டம் தேவை இல்லை

    அப்போது அவர்கள் இந்த பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளது. நாங்கள் உயிர்பயத்துடன் இருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்க ளுக்கு தேவை இல்லை.

    பாதாள சாக்கடை திட்டம் எங்கள் பகுதிக்கு தேவை இல்லை. இதனை ரத்து செய்ய வேண்டும். தற்போது கழிவறையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். அப்போது அதிகாரிகள் இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை 1 ½ மணிநேரம் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. * * * சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    • ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

    சென்னை ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

    ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எஃப் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

    பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பாழடைந்த கிணற்றை தூர்வார முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர் சுபாஷ் சந்திரபோஸ் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன்(வயது 60). இவரது வீட்டில் உள்ள கிணறு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது.

    தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பாழடைந்த அந்த கிணற்றை தூர்வார முடிவு செய்தார். அதன்படி கண்ணப்பனின் மகன் சந்தோஷ்(30), அவரது நண்பர்கள் அன்பழகன் (32), காளிதாஸ்(34) ஆகியோர் பாழடைந்த கிணற்றை தூர்வார முயன்றனர்.

    இதற்காக சந்தோஷ், முதலில் கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது கிணற்றில் இருந்த விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதைகண்ட அன்பழகன், காளிதாஸ் ஆகியோர் சந்தோசை மீட்க கிணற்றில் இறங்கினர். அவர்களையும் விஷவாயு தாக்கியதால் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்த சேகர்(34), ராஜு(35), கோவிந்தசாமி(34) ஆகியோர் ஓடிவந்து கிணற்றில் விழுந்த 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களையும் விஷவாயு தாக்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, கிணற்றில் விஷவாயுவை போக்க ‘ஸ்பிரே’ அடித்தனர். பின்னர் உயிர்பாதுகாப்பு கவசம் அணிந்தபடி கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், அங்கு மயங்கி கிடந்த 6 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    ஆனால் அதற்குள் விஷவாயு தாக்கியதில் சந்தோஷ், அன்பழகன், காளிதாஸ் ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். சேகர், ராஜு, கோவிந்தசாமி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×