என் மலர்
நீங்கள் தேடியது "Gauri Lankesh"
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
- பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று போலீசில் வாக்குமூலம் அளித்தார் நவீன் குமார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பலர் அவரது கொலைக்கு நீதிகேட்டு குரல் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்தப் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் வழக்கின் தீர்ப்பு தாமதமாவதால் தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மற்ற 3 குற்றவாளிகளும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, அமித் திவேகர், நவீன் குமார், சுரேஷ் ஆகிய 3 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவனான நவீன்குமார், பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
- இந்து அமைப்பினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு இந்து அமைப்புகள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கொலை வழக்கில் சிக்கி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தனர். இருவருக்கும் பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமின் கிடைத்த நிலையில், இருவரும் கடந்த 11 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தனர். அங்கிருந்து சொந்த ஊரான விஜயபுராவுக்கு சென்ற பரசுராம் மற்றும் மனோகர் ஆகிய இருவருக்கும் உள்ளூர் வாசிகளான இந்து அமைப்பினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
சிறையில் இருந்து ஜாமின் பெற்று வந்த இருவரை இந்து அமைப்பினர் சத்ரபதி சிவாஜி சிலை அருகே அழைத்து சென்று இருவருக்கும் மாலை அணிவித்தனர். அதன்பிறகு அருகில் அருந்த கோவில் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள இருவருக்கு உள்ளூரில் இந்து அமைப்பினர் வரவேற்பு கொடுத்த சம்பவம் முகம் சுளிக்க செய்தது.
- ஜாமீனில் வெளிவந்த கொலை குற்றவாளிகளுக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதற்கிடையில் இந்தக் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தெடர்ந்து மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து வெளியே வந்தனர். கடைசியாகக் கடந்த அக்டோபர் 11 அன்று ஜாமீனில் வெளிவந்த இருவருக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்நத ஸ்ரீகாந்த் கடந்த 2001 முதல் 2018 வரை அப்போதய ஒருங்கிணைத்த சிவசேனாவில் ஜால்னா தொகுதி முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் சீட் மறுக்கப்பட்டதால் சிவசேனாவின் இருந்து வெளியேறி வலதுசாரி அமைப்பான இந்து ஜன்ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த செப்டம்பரில் கடந்த செப்டம்பர் 4 அன்று ஜாமீனில் வந்த அவர் தற்போது ஷிண்டே சிவசேனா தலைவர் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோத்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வரும் நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிடுவேன் என்றும் ஸ்ரீகாந்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆளும் மகாயுதி கூட்டணி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] இடையே சீட் பகிர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.
பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதற்கிடையில் இந்தக் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தெடர்ந்து மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து ஜாமினில் வெளியே வந்தனர். கடைசியாகக் கடந்த அக்டோபர் 11 அன்று ஜாமினில் வெளிவந்த இருவருக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.
மகாராஷ்டிராவை சேர்நத ஸ்ரீகாந்த் கடந்த 2001 முதல் 2018 வரை அப்போதைய ஒருங்கிணைத்த சிவசேனாவில் ஜால்னா தொகுதி முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் சீட் மறுக்கப்பட்டதால் சிவசேனாவின் இருந்து வெளியேறி வலதுசாரி அமைப்பான இந்து ஜன்ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த செப்டம்பரில் கடந்த செப்டம்பர் 4 அன்று ஜாமீனில் வந்த அவர் தற்போது ஷிண்டே சிவசேனா தலைவர் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோத்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டதை மகாராஷ்டிர முதல்வர் ஏகாந்த் ஷிண்டே ரத்து செய்தார்.
ஜல்னா மாவட்டத்தில் சிவசேனா கட்சி சார்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் செல்லாது என்று காந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இடதுசாரி கொள்கையுடைய கவுரி லங்கேஷை இந்துத்துவா ஆதரவாளர்கள் சுட்டுக்கொன்றதாக கர்நாடக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வுப்படை அமைக்கப்பட்டது. இதில் எந்த துப்பும் துலங்கவில்லை.
கொலை நடந்த ஒரு ஆண்டுக்கு பின் மராட்டிய தீவிரவாத தடுப்பு படை போலீசாரிடம் சுதன்வா கொன்தலேகர், நரேந்திர தபோல்கர், கர்பிர்ஜி ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கவுரி லங்கேஷை குறிபார்த்து சுட்டுக்கொன்றதாக பரசுராம் வக்மரே, மனோகர் எடவே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான குற்றவாளிகள் அனைவரும் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் பரசுராம் வக்மரே, மனோகர் எடவே ஆகியோரை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்று ஆஜர்படுத்தினர்.
பின்னர் வெளியே வந்த இருவரும் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களுக்கு கவுரி லங்கேஷ் கொலையில் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அந்த கொலையில் ஈடுபடவில்லை. போலீசார் தான் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி ரூ.25 லட்சம் பேரம் பேசினார்கள் என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டனர்.
இதனால் கவுரி லங்கேஷ் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலையாளிகள் திடீர் என்று போலீஸ் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதால் தங்கள் மீதான புகாரை திசை திருப்பும் செயலா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #gaurilankesh
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது. அவருடைய நினைவு நாளையொட்டி, கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு மவுரியா சர்க்கிளில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது.

மூத்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த நபர் உள்பட பலரை கைது செய்து உள்ளன. இவர்கள் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் சனதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்புகளால் வழிகாட்டுதலின்படி செயல்பட்டுள்ளனர்.
இவர்கள் தான் முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கலபுரகி ஆகியோரையும் படுகொலை செய்துள்ளனர். இந்த அமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருங்காலத்தில் மேலும் படுகொலை செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
எனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். அத்துடன், அமைதி காப்பது, சகிப்புத்தன்மை, மரியாதை, அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பு ஆகியவை பற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் வகையில் விழிப்புணர்வை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #GauriLankesh

இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதிய பிரபல கர்நாடக பெண் எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று அண்மையில் காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுபற்றி ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் நேற்றுமுன்தினம் பெங்களூருவில் கூறும்போது, “இடது சாரி ஆதரவு அறிவாளிகள் கவுரி லங்கேஷ் கொலை பற்றி பிரதமர் மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். கர்நாடகாவில் சாகும் ஒவ்வொரு நாய்க்காகவும் மோடி பதில் அளிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என்று கடும் எதிர்ப்பும் எழுந்தது.
இதற்கு நேற்று பதில் அளித்த பிரமோத் முத்தலிக் கூறும்போது, “கவுரி லங்கேஷை நாயுடன் நான் ஒப்பிடவில்லை. அவரை இழிவுபடுத்தும் எண்ணமும் கிடையாது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு இறப்புக்கும் பிரதமர் மோடி பதில் அளிக்கவேண்டுமா? என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்” என்றார். #GauriLankesh #Murder #PramodMuthalik #tamilnews
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அவருடைய வீட்டில் மர்மநபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழுவினர், இந்த கொலையில் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளனர்.

எழுத்தாளர் பகவானை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் தொடர்புடைய பிரவீன் என்ற சுஜீத்குமார், அமோல் காலே, பிரதீப், மனோகர் மற்றும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர் (வயது 26) ஆகியோர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான பரசுராம் வாக்மோர் தான் கவுரி லங்கேசை சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விசாரணையின்போது கவுரி லங்கேசை கொலை செய்ய கொலையாளிகள் ‘ஆபரேஷன் அம்மா’ என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டியதும், இதையே அவர்கள் தங்களுக்குள் சங்கேத வார்த்தையாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து சிக்கிய டைரிகளில் பல்வேறு சங்கேத வார்த்தைகள், அடையாள குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர்கள் சங்கேத வார்த்தை மூலம் சுமார் ஒரு ஆண்டாக பொது தொலைபேசியில் இருந்து ஒருவரையொருவர் தொடர்புகொண்டு பேசி வந்துள்ளனர்.
கவுரி லங்கேஷ் இந்துக்களுக்கு எதிராக பேசியது, எழுதியது குறித்து பரசுராம் வாக்மோரிடம் எடுத்துக்கூறி அவரை ‘மூளை சலவை’ செய்து கொலை செய்ய வைத்தது தெரியவந்துள்ளது. அவர் கவுரி லங்கேசை கொலை செய்ய ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு பெலகாவியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்துள்ளார். அப்போது சுமார் 500 குண்டுகளை சுட்டு பரசுராம் வாக்மோர் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
கைதான பரசுராம் வாக்மோர் ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதனை அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தொடர்ந்து மறுத்துவருகிறார். ஸ்ரீராமசேனை அமைப்பின் விஜயாப்புரா மாவட்ட தலைவர் ராகேஷ் மத் என்பவரை பிடித்து நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, பரசுராம் வாக்மோர் பற்றிய பல்வேறு விஷயங்களை அவர்கள் கேட்டு அறிந்ததாக சொல்லப்படுகிறது.
2 பேருக்கும் இடையேயான பழக்கம், கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்பு பரசுராம் வாக்மோரின் நடவடிக்கை எப்படி இருந்தது என்பது போன்ற முக்கிய கேள்விகளை அவரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் கேட்டுள்ளனர். இதற்கு ராகேஷ் மத் பதில் அளித்துள்ளார். கவுரி லங்கேஷ் கொலை வழக்கு பற்றிய செய்திகளை பரசுராம் வாக்மோர் உன்னிப்பாக படித்து அதுபற்றி ராகேஷ் மத்திடம் விவாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே, நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் பரசுராம் வாக்மோரை அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். பரசுராம் வாக்மோரின் தந்தை அசோக், தாய் ஜானகிபாய், மாமா அசோக் காம்ளே ஆகியோர் நேற்று பெங்களூருவில் உள்ள சிறப்பு விசாரணை குழுவினரின் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடமும் விசாரணை நடத்தி பரசுராம் வாக்மோர் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்ததாக சொல்லப்படுகிறது. #GauriLankesh #OperationAmma #Tamilnews

பெங்களூர்:
பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது55) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி இரவு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது வீட்டு சி.சி. டி.வி. கேமராவில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. கவுரி லங்கேஷ் கொலை வழக்கை கர்நாடக உளவுப் பிரிவு ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
கவுரி லங்கேஷ் சுதந்திர சிந்தனையாளர். உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். அவரது கொலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக முக்கிய புள்ளியான மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் பெங்களூர் பஸ் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நவீன ரக துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.
புலனாய்வு குழுவினர் விசாரித்தபோது அவருக்கு நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த வலதுசாரி பங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரின் உருவப்படங்களை போலீசார் வரைந்து வெளியிட்டு தேடி வந்தனர்.
நவீன்குமார் அளித்த வாக்கு மூலத்தில் கொல்லேகால் காட்டுப் பகுதியில் 4 பேரை காரில் அழைத்து வந்து சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்தார். 4 பேரும் இந்தி பேசும் வாலிபர்கள் என்றும் தெரிவித்தார். அதன் பேரில் சிவமோகாவைச் சேர்ந்த நவீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே போலீஸ் தேடும் கொலையாளிகள் மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் கர்நாடக சிறப்பு படை போலீசார் மும்பை மற்றும் மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தேடி வந்தனர்.
இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மராட்டிய வாலிபர் ஒருவர் சிக்கினார். அவருக்கு கொலையில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பிடிபட்ட வாலிபருக்கு 30 வயது இருக்கும். 5 அடி ஒரு அங்குலம் உயரமும், 75 முதல் 80 கிலோ எடையும் இருப்பார் என்று போலீசார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி எதுவும் சிக்கவில்லை.
சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளுடன் மராட்டிய வாலிபரை ஒப்பிட்டுப் பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #GauriLankeshmurder