என் மலர்
நீங்கள் தேடியது "gautam vasudev menon"
- ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' நடித்து வருகிறார்.
- தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த போஸ்டரை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் நடிகர் ஆர்யா கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy to Unveil the impressive first look poster of #KatherBashaEndraMuthuramalingam.
— Gauthamvasudevmenon (@menongautham) December 10, 2022
Best wishes to the entire team.#KEMthemovie@arya_offl @dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @venkatraj11989 @veeramani_art @ActionAnlarasu pic.twitter.com/V4PKigiJkb
- கமல் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
- இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

வேட்டையாடு விளையாடு
இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பவர் விஷால்.
- நடிப்பு மட்டுமின்றி திரையுலகில் பல துறைகளில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படம் மூலம் அறிமுகமான விஷால் அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்த நிலையில், நடிகர் விஷால் நடிக்கும் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விஷால் - கவுதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ராஷ்மிகாவை வைத்து புதிய விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் புகழ் பெற்ற டி.ஆர்.ஏ. நிறுவனம் தனது விளம்பர தூதராக தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமனம் செய்துள்ளது. இவரை பிராண்ட் தூதராக நியமித்து இருப்பதன் மூலம் தங்களது புதிய தத்துவமான 'பெருமைமிகு இல்லம்' என்னும் தாரக மந்திரத்திற்கு ஏற்ப தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, டி.ஆர்.ஏ. நிறுவனம், ராஷ்மிகாவை வைத்து புதிய விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மக்கள் தங்கள் வீடுகள் மீது வைத்திருக்கும் உணர்ச்சிபூர்வமான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
தொலைக்காட்சி விளம்பரம் தவிர, பத்திரிக்கை, டிஜிட்டல் விளம்பரங்கள், மல்டிபிளக்ஸ் விளம்பரம் எனது அனைத்து தளங்களிலும் இந்த விளம்பரத்தை டி.ஆர்.ஏ. வெளியிடுகிறது.
ராஷ்மிகா மந்தனா, இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இணைந்திருப்பதன் மூலம், டி.ஆர்.ஏ. தனது வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விளம்பரத்தை பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.
- விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
- இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்தது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் வெளியான காதல் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்தப் படம், இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர். இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர். மற்றும் வி.டி.வி கணேஷ், ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்.
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். கூறும் போது, "விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வந்து, 15 ஆண்டுகள் நிறைவடைந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை அதன் வெளியீட்டின் போதும், இன்றும் மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு என் நன்றிகள். கௌதம் மேனன் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்," என்றார்.
நடிகை திரிஷா பேசும் போது, "விண்ணைத்தாண்டி வருவாயா எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகும். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இதைப் படமாக்கிய கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எனது நன்றி. இப்படம் இன்னும் பலரின் அன்பினால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது நாங்கள் கடந்து வந்த அத்தனை தருணங்களும், மிக மிக அழகான நினைவுகள். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். மேலும் இந்தப் படத்தை இன்றும் கொண்டாடும் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்," என்று தெரிவித்தார்
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசும் போது, "சில திரைப்படங்கள் 10, 15, 25 ஆண்டுகள் நிறைவடையும் போது அதைப் பற்றி பேசுவது வழக்கம். ஆனால், 'விண்ணைத்தாண்டி வருவாயா' பற்றி பேசும்போது எனக்கு உணர்ச்சிப் பூர்வமான, மிக ஆழமான உணர்வு தோன்றுகிறது. பலரும் என்னை சந்திக்கும் போது, இன்னும் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களை நினைவுகூர்கிறார்கள். சிம்பு இல்லையெனில் இந்தக் கதையில் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கும் என நான் நிச்சயமாக சொல்ல முடியாது. அத்தனை சிறப்பாக அவர் அந்தக் கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் அவருக்கு என் நன்றி."
"திரிஷா என்னிடம் இந்தப்படத்தின் வில்லன் நான் தான், என்னை மக்கள் வெறுப்பார்கள் என்றார். நான் அதற்கு ரசிகர்கள் உங்களை அடிக்கக் கூட கூடும், ஆனால் இந்தப்படத்திற்குப் பிறகு மக்கள் உங்களை நேசிப்பதை நிறுத்தவே மாட்டார்கள் என்றேன். இந்தப் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தை உருவாக்கிய ஒவ்வொரு தருணங்களிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை, இந்தக் கதையில் ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியது. மனோஜின் காட்சியமைப்பும், ஆண்டனியின் எடிட்டிங்கும் இந்தப் படத்தை மனதிற்கு மிக நெருக்கமான படைப்பாக மாற்றின," என்றார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோட்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை விநியோகித்தது. இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் பாடல்களை பாடிய பாடகர்கள் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், சோனி மியூசிக் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஒரு சிறப்பு ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளனர். lovefullyvtv.com எனும் இணையதளம் விடிவி ரசிகர்களை இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற செய்கிறது. இந்த தளம் மூலம் அனைத்து விடிவி பட ரசிகர்களும் படத்தின் சிறப்பு தருணங்களை, படக்குழுவினரின் அனுபவங்களை, படப்பாடல்களை கேட்டும் பார்த்தும் அனுபவிக்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் ‘துணிவு' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை தொடர்ந்து ஏகே-62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.

விக்னேஷ் சிவன் - அஜித் - அனிருத்
"அஜித் நடிக்கும் புதிய படத்தில் 'மாஸ்' காட்டும் வில்லன் நடிகர் நிச்சயம் இருப்பார்" என்று சமீபத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருந்தது. அஜித்துடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி, ராணா பெயர்களும் அடிபட்டன.

கவுதம் மேனன் - அஜித்
ஆனால் தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் வாசுதேவ் மேனன் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கவுதம் மேனன் - அஜித்
கவுதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவதை தாண்டி சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் 'டப்பிங்' வசனமும் பேசியிருக்கிறார். சமீபத்தில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

கவுதம் மேனன் - அஜித்
அஜித் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்...' படத்தில் வரும் 'அதாரு... அதாரு...' என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு.
- இப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது.

கவுதம் வாசுதேவ் மேனன் - சிம்பு
இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். இவ்விழாவில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சிம்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது பேசிய கவுதம் மேனன் படத்தில் இடம் பிடித்து ஹிட் அடித்த மல்லிப்பூ பாடல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

கவுதம் வாசுதேவ் மேனன்
அதில், "மல்லிப்பூ.. பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல் எங்களின் கதை களத்திலேயே இல்லை. ஏ.ஆர்.ரகுமான் சார் தான், 'இப்போதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களின் உறவுகளுடன் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். அதே போன்றதொரு காட்சிதான் இந்த படத்தில் வருகிறது. அதை ஏன் நாம பாடலாக பண்ண கூடாது" என கேட்டு, அதுக்கு அப்புறம் தான் மல்லிப்பூ பாடல் உருவானது. இந்த பாடல் இன்று இவ்வளவு பெரிய ஹிட்டடிக்க ஒரே காரணம் ஏ.ஆர் ரஹ்மான் சார் தான்" என்றார்.
- கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் தடை இல்லை என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக மாற்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு
இப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆலியின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் 2018-ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படத்தை இயக்குவதற்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு முன்பணமாக ரூ.2 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது எங்களிடம் கூறிய அதே கதையை 'வெந்து தணிந்தது காடு' என்ற பெயரில் படமாக எடுத்து அதை நாளை வெளியிட இருப்பதாகவும் தங்களுக்கு தரவேண்டிய ரூ.2 கோடியே 40 லட்சம் பணத்தை தராமல் இந்த படத்தை வெளியிடக்கூடாது படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

வெந்து தணிந்தது காடு
இந்த மனுவானது நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்ட இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அதேசமயம் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது உண்மைதான் என்றும் அடுத்த படத்தை இயக்கும் முன்பாக மனுதாரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாகவும், இது சம்மதமாக மனுதாரருடன் சமரசம் செய்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

வெந்து தணிந்தது காடு
இந்த சமரசம் செய்துக் கொள்வதற்கு மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பான உத்தரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி கவுதம் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். தற்போதைக்கு இந்த படத்துக்கு தடை ஏதும் விதிக்கப்படாத காரணத்தினால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று தெளிவாகிறது.
- கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் மேனன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரகுமார்
இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக மாற்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் - சிம்பு
இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில், "வெந்து தணிந்தது காடு படத்தை காலை 5 மணிக்கு பார்க்க வரும் ரசிகர்கள் இரவு நன்றாக தூங்கிவிட்டு வரவும். ஏனென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்" என்று கவுதம் மேனன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.