என் மலர்
நீங்கள் தேடியது "GeneralBipinRawat"
- 2023-ம் ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.
- புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஊட்டி:
இந்திய ராணுவ முப்படைத்தளபதியாக இருந்த பிபின்ராவத் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான பகுதியில் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் கடந்த 2023-ம்ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இதில் பிபின்ராவத் உள்ளிட்ட உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் அந்த நினைவுத்தூணில் ஆன்மா அழியாதது, அதனை எந்த ஆயுதத்தாலும் துளைக்க முடியாது, எந்த நெருப்பாலும் அழிக்க முடியாது. தண்ணீராலும் ஈரப்படுத்த முடியாது, காற்றாலும் உலரப்படுத்த முடியாது என்ற பகவத்கீதையின் வாசகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிபின்ராவத் உள்ளிட்டோரின் 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராணுவத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமான்டண்ட் வீரேந்திரவாட்ஸ் பிபின்ராவத் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களும் திரண்டு வந்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
- ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார்.
- நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.
குன்னூர்:
குன்னூரில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் பலியானார்கள்.
இந்த விபத்திற்கு மனிதப் பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தாக்கலான பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அதில் 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் சிக்கி இறந்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்.
இந்த விபத்திற்கு விமானியின் தவறே காரணம். வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார். பின்னர் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.
ஹெலிகாப்டரில் இருந்த ரிகார்டரில் பதிவான விபரங்களின் அடிப்படையிலேயே, பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு மனித பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.
இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பாகிஸ்தான் ராணும் தொடச்சியாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனா பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நாம் அமைதியை விரும்புகிறோம். ஆனால் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. மக்கள் அமைதியாகவும், மகிழ்சியாகவும் வாழ ராணுவம் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடாமல் உள்ளது. இதே சூழ்நிலை நீடிக்க அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், நாமும் தாக்குதல் நடத்துவோம்.
ராணுவத்தில் தவறு செய்யும் வீரர்களுக்கு தண்டனை கண்டிப்பாக வழங்கப்படும். அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் சரி. மேஜர் கோகாய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டும். அவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.
என தெரிவித்தார்.
சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் மேஜர் லீதுல் கோகாய் சென்றுள்ளார். ஆனால், அந்த பெண் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், ஓட்டல் நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதனை அடுத்து, கோகோய் மற்றும் அவரது டிரைவர் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.
போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர், கோகோயை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. #MajorGogoi #GeneralBipinRawat