search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GH"

    • மருத்துவமனையில் 166 மருத்துவா்களும், 225 செவிலியா்களும் பணியில் உள்ளனா்.
    • கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் உள்பட மொத்தம் 6 ஆய்வகங்களும் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் 166 மருத்துவா்களும், 225 செவிலியா்களும் பணியில் உள்ளனா்.

    இந்த மருத்துவமனையில் மொத்தம் 1,170 படுக்கைகளும், வெளி மற்றும் உள்நோயாளிகள் பரிசோதனைக்கூடம், தொற்றுநோய் கண்டறியும் ஆய்வகம், கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் உள்பட மொத்தம் 6 ஆய்வகங்களும் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு 700 முதல் 750 உள்நோயாளிகளுக்கும், 2,000 முதல் 2,500 வெளிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் திருப்பூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட கலெக்டர் வினீத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சிகிச்சையில் இருக்கும் நபா்களின் உடல் நலம் விசாரித்ததுடன், சிகிச்சை அளிக்கும் முறை குறித்த விவரங்களையும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

    இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் முருகேசன், கண்காணிப்பாளா் ஜெயசங்கரநாராயணன், மருத்துவா்கள் சஞ்சய், தீபக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • கிராம மக்கள் சிகிச்சை பெற பல்லடம் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர்.
    • பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 800க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்திலுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற பல்லடம் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர். கிராமங்களில் போதிய மருத்துவ வசதி கிடைக்காததால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அந்த வகையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 800க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில்மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    அரசு மருத்துவமனையில் சுகாதார வளாகத்தை சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லை என்றும், நோயாளிகளே சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சுகாதார வளாகத்தில் உள்ள குழாயில் தண்ணீர் வருவதில்லை. வெளியே இருந்து கொண்டு வந்துதான் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் பணியாளர்கள் இல்லாததால், சுகாதார வளாகம் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனாலேயே நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்களை நியமித்து சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழக அரசு தடுப்பு மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளை படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் வைக்குமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் மீண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது " திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மேலும் படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் குணமடைந்தார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    • நெல்லையில் நேற்று பாதிப்பு 9 ஆக இருந்த நிலையில் இன்று 17 ஆக உயர்ந்தது.
    • நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் படுக்கைகள் தயார்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த 15-ந்தேதி கொரோனா பாதிப்பு பூஜ்யமாக இருந்த நிலையில் மறுநாள் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் தினசரி பாதிப்பு உயர தொடங்கியது. நேற்று பாதிப்பு 9 ஆக இருந்த நிலையில் இன்று 17 ஆக உயர்ந்தது.

    இன்றைய பாதிப்பில் மாநகர பகுதியில் மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நாங்குநேரியில் 5 பேருக்கும், ராதாபுரத்தில் 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற வட்டாரங்களில் இன்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    தற்போது பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே உள்ளனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.

    இதற்கிடையே கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் 50 முதல் 100 படுக்கைகள் வரையிலும் தயார் நிலையில் வைக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் படுக்கைகள் தயார்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

    கடந்த காலத்தில் கொரோனா அலையின்போது ஒதுக்கப்பட்ட வார்டுகள், படுக்கைகள் அனைத்தும் தயார் நிலையிலேயே இருப்பதாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×