என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gita"
- சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் குறித்து விமர்சித்து வருகிறார்.
- அனைவருக்கும் பொதுவான நூல் என்பதால் அது உலக பொதுமறை என போற்றப்படுகிறது.
கும்பகோணம்:
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் தத்துவாஞ்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு வருகை தந்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
திருக்குறள் உலகப் பொதுமறை. அதற்கு ஜி. யூ. போப் மொழி பெயர்த்தது குறித்து கவர்னர் ரவி விமர்சிக்கிறார்.
சமயத்தை பற்றி அவர் கூறவில்லை என்று கூறுகிறார்.திருக்குறளுக்கு திரு. வி. க., மு.வரதராசனார், கருணாநிதி, நாவலர் உள்ளிட்ட பலர் உரை எழுதியுள்ளனர்.
இந்துக்களுக்கு பகவத் கீதை, கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குரான் என்பது சமய நூல்கள். ஆனால் திருக்குறள் சமய நூல் அல்ல.
அனைவருக்கும் பொதுவான நூல் என்பதாலேயே அது உலகப் பொதுமறை என போற்றப்படுகிறது.
சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக அரைகுறையாக தெரிந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இது தேவையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.