search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "glass breaking"

    மதுபோதையில் மர்மநபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான பஸ் மொரட்டாண்டி டோல்கேட் அருகே இருந்த மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட டிரைவர் இது தொடர்பாக பள்ளி முதல்வருக்கு தகவல் கொடுத்தார். மேலும், பஸ்சிற்கு அருகில் காலியான மதுபாட்டீல்களும் கிடந்தன.

    இது குறித்து ஆரோவில் போலீசாரிடம் தனியார் பள்ளியில் முதல்வர் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மதுபோதையில் மர்மநபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சமீப காலமாக வானூர், ஆரோவில் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது.
    • பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார்.

    வெள்ளகோவில் :

    கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் அருகே வரும்போது வெள்ளகோவில் எம்.பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 45) என்பவர் குடிபோதையில் பஸ் கண்ணாடியை கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பஸ் கண்ணாடி உடைந்து விட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி தப்பினர்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.
    • அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும். அதுபோல நேற்று இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.

    ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிவிடுகின்றனர். இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
    • புதுவை மாநிலம் மதகடிப்பட்டி பகுதியில் 2 வாலிபர்கள் ஏறினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட த்திற்கு புதுவையில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்த வண்ணம் இருக்கும். இந்நிலையில் சம்பவத்தன்று புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை டிரைவர் பார்த்த சாரதி ஓட்டினார். கண்டக்ட ராக உமாநாத் பணியில் இருந்தார். அப்போது புதுவை மாநிலம் மதகடிப்பட்டி பகுதியில் 2 வாலிபர்கள் ஏறினர். அவர்கள் குடித்து விட்டு எந்த நிலையில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல் போதை தலைக்கேறி இருந்தனர். மேலும் அவர்கள் பஸ்ஸில் ஏரியதிலிருந்து இறங்கும் வரை சத்தம் போடுவது கூச்சல் போடுவது பஸ்ஸில் இருந்த பயணி களை பயமுறுத்து வது உள்ளிட்ட ஒழுங்கீ னமான செயல்களை செய்த னர். மேலும் அவர்கள் பஸ் கண்டக்டர் உமாநாத் இடம் தகராறில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அந்த 2 போதை வாலிபர்களும் கோலியனூர் கூட்ரோட்டில் இறங்கினர்.

    அதன்பின் பஸ் சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு வாலிபர்களும் போதையில் அருகில் கிடந்த கல்லை எடுத்து பஸ் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் பதறிப் போய் அழறினர். இந்த கல்விச்சில் அதிர்ஷ்ட வசமாக எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பஸ் டிரை வர் கண்டக்டர் வளவனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து மொபைல் போன் மூலம் எடுக்கப்பட்ட போட்டோ ஆதாரங்களின் அடிப்ப டையில் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் கோலியனூர் கூட்ரோடு ராமையன் பாளையம் பகுதி யைச் சேர்ந்த சக்திவேல் (வயது 25), ராசையா (26) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ராசையாவை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.
    • இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் தனியார் பஸ்சில் 10 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று பகல் 2 மணி அளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இந்திலி ஆர் .கே. எஸ். கல்லூரி அருகே அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.

    பின்னர் டிரைவரை பார்த்து நீ பஸ் சாலையில் ஓட்டுறியா? இல்லை வானத்தில் ஓட்டுகிறாயா? என ஆபாசமாக திட்டி கல்லால் பஸ்சின் முன் பகுதி கண்ணாடியை உடைத்துசேதப்படுத்தினார். இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்கை பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சிதம்பரத்தில் இன்று பரபரப்பு 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
    • மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுவை மாநில அரசுக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே சீத்தாம்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் அச்சத்துடன் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் கீழே இறங்கினர். அப்போது அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது. உடனடியாக அரசு பஸ் டிரைவர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி சென்றார்.

    இதேபோல் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிநோக்கி தமிழக அரசுக்கு சொந்தமான சொகுசுபஸ் சென்றது. இந்த பஸ் சீத்தாம்பாளையம் பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. உடனடியாக இந்த பஸ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த கும்பல் பஸ்கள் மீது கற்களை வீசியது தெரியவந்தது. எனவே பஸ் மீது கற்களை வீசி சென்ற கும்பல் யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×