என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Global Investors Meet"
- 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.
- நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!
இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.
நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு!
'எல்லோருக்கும் எல்லாம்',
'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி'
என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
#TNGIM2024-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!
— M.K.Stalin (@mkstalin) January 9, 2024
இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு… pic.twitter.com/AmrWizWiD2
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
- ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு இந்த மாநாடு வித்திட்டுள்ளது. இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி, என் இதயத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடுகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஈர்த்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன். இதன்மூலம், 74,757 இளைஞர்கள், மகளிருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 14,54,712 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
12,35,945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவு பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி மட்டுமின்றி ஏற்றுமதியையும் இலக்காக கொண்டு செயல்பட திட்டம்.
9 நாடுகள் இந்த மாநாட்டில் பன்னாட்டு அரங்குகள் அமைத்து சிறப்பு சேர்த்துள்ளன.
எங்கள் அரசு மீதும் கொள்கை மீதும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்.
தொழிற்சாலை அமைத்து, உற்பத்தி தொடங்கிய பின்னும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
மாநாட்டில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
முதலீடு செய்யாதவர்களையும் முதலீடு செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் வேலைகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும்.
- பல நாடுகளில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடுகள் செய்வதையும் நம்மால் காணமுடிகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாறறினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கணினிகளை மனிதர்கள் போல் செயல்படும் வகையில் வடிவமைக்க தொடங்கிவிட்டோம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் வேலைகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் Content-களை உருவாக்கினால் அது வேலைவாய்ப்புகளை பெருக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் DeepFake உள்ளிட்ட எதிர்மறையான தாக்கங்கள்
அதிகரித்துள்ள சூழலில், அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.
பல நாடுகளில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடுகள் செய்வதையும் நம்மால் காணமுடிகிறது.
மனிதர்களால் ஏற்படும் அழிவு மற்றும் இழப்பை AI தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி சரி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பது வழக்கம்.
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்-சூட் அணிந்து பங்கேற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பது வழக்கம். கோட்-சூட் போடுவது கிடையாது.
ஆனால் இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்-சூட் அணிந்து பங்கேற்றார்.
இதுபற்றி அவர் மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டதாவது:-
வெளிநாடுகளுக்கு போகும்போதுதான் நான் 'சூட்' போடுவது வழக்கம். ஆனால் இங்கே எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட்-சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது.
இன்று காலையில் இருந்து சென்னையில் மழை பெய்கிறது. நான் இங்கே வந்தவுடன் முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
- புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில், எரிசக்தி துறையில், 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன.
பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ள நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது
- சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தீல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இது நாளை நிறைவடையும்.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.
தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாட்டில் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.
"வணக்கம்" என தமிழில் தொடங்கி தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:
10 ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்த பொருளாதாரத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்தியாவின் 100-வது சுதந்திர தின விழாவில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழும். காஞ்சி பட்டு போல் பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயித்து பயணிக்கும் தமிழகத்திற்கு வாழ்த்து. ஆதித்யா-எல்1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர். நாடு வலிமையடைய அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்த நாடாக நமது நாட்டை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தவும் நாம் செயல்படுவோம்.
இவ்வாறு அமைச்சர் பியூஷ் கூறினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுக்கு தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு உள்ளது என முதலமைச்சர் பேச்சு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். மேலும், சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன். சிங்கப்பூர் நாணயத்திலும் தமிழ் உள்ளது. சிங்கப்பூர் வாழ் தமிழர்களை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிங்கப்பூர்- தமிழ்நாடு இடையேயான தொடர்பு ஆயிரம் ஆண்டுக்கும் மேலானது.
தமிழால் இணைந்துள்ள நம்மை சாதி மதத்தால் பிரிக்க முடியாது. தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்து முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார்.
- சென்னையில் ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது.
சிங்கப்பூர்:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர்கள், பல்வேறு தமிழ் அமைப்பினர், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், அரசு உயர் அதிகாரிகள் மலர் கொத்து, புத்தகங்கள், பொன்னாடைகள் வழங்கி வரவேற்றனர்.
சிங்கப்பூர் சென்றடைந்த மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களையும், முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளையும் சென்று சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்து முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார்.
இன்று மாலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உலகத் தரத்திலான திறமைகள், போதுமான உள்கட்டமைப்பு, ஸ்திரமான கொள்கை ஆகியவற்றுடன் விருப்பமான முதலீட்டு தளமாக தமிழ்நாடு திகழ்வதாக கூறியதுடன், தமிழகத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த மாநாட்டின்போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), பேம் டிஎன், டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந் தேதிகளில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, ‘தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டு பேசுகிறார். மதியம் 2 மணி முதல் பல்வேறு தலைப்புகளின் கீழ் துறை சார்ந்த கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
2-வது நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கருத்தரங்கங்களுடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது. மதியம் 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைமை விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசுகிறார். சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. சுமார் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #GlobalInvestorsMeet2019 #GIM2019
சென்னையில் வரும் 23, 24-ந் தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஏமாற்றும் நிறுவனங்களிடம் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில், நிறுவனங்களுக்கு எப்படி நிலம் ஒதுக்கப்படும்? என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார். #GIM2019 #HighCourt #GIMCase
இந்நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்