என் மலர்
நீங்கள் தேடியது "Goat rearing"
- ஆடு வளர்ப்பு தொழிலில் கிராம மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
- பக்ரீத் பண்டிகை வருவதால் விற்பனைக்கு கிராமங்களில் ஆடுகள் வளர்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, கொம்பூதி, சடைமுனியன் வலசை, பிரப்பன் வலசை, தேர்போகி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள கடலோர கிராமப்புற மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக செய்து வந்தனர். இந்நிலையில் கூடுதலாக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் வருவாய் அதிகமாக கிடைப்பதால் தற்போது பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக கிராமங்களில் ஆடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எடையை வைத்து ஆடுகளுக்கு பணம் வழங்கப்படுவதால் எடை அதிகரிக்க தீவனமாக சோளம், அகத்தி கீரை போன்ற உணவுகள் கொடுக்கப்படுகிறது.
பண்டிகை நாட்களில் மட்டும் இறைச்சி தேவை அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாரத்தில் ஒரு நாள் இறைச்சியை உணவாக சேர்த்துக்கொள்ளும் முறையை ஏராளமானோர் கடைபிடிப்பதால் தேவை அதிகரித்து, ஆடுகள் விலை உயர்ந்து இறைச்சி விலையும் எகிறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ இறைச்சி ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.800 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை குறிப்பிட்ட சமூக மக்கள் ஆடு வளர்ப்பு தொழிலை செய்து வந்தனர். இதில் வருவாய் அதிகமாக கிடைப்பதை அறிந்த மக்கள் வீடுகள் தோறும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். அதிகமான ஆடுகள் இருந்தாலும் தேவை அதிகரிப்பால் விலை குறைவதற்கான வாய்ப்பு கிடையாது.ஆடுகளை நோய்கள் தாக்காத நிலையில், சுகாதாரத்துடன் வளர்த்து வந்தால் நல்ல விலைக்கு ஆடுகளை விற்பனை செயது வருகின்றனர். தற்போது பக்ரீத் பண்டிகை வருவதால் விற்பனைக்கு கிராமங்களில் ஆடுகள் வளர்ப்பு அதிகமாக காணப்படுகிறது.