search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gobi"

    • கோபி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
    • அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி பஸ் நிலையத்தில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வெளியூரில் பணிக்கு செல்லும் சிலர் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.

    அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர். மீண்டும் வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோபி அருகே வீட்டு முன் விளையாடிய சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி மொடச்சூர் ரோட்டை சேர்ந்தவர் தர்மதுரை. சோன்பப்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மனைவி பெயர் கமலேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகள் பெயர் சன்மதினா (வயது7).மகன் பெயர் கிருஷ்ணன்(8). இந்த நிலையில் சன்மதினா. கோபி அருகே உள்ள குழவி கரட்டில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றாள்.

    நேற்று இரவு சிறுமி சன்மதினா பாட்டி வீட்டு முன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்தாள். இதில் படுகாயத்துடன் துடித்த சிறுமியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சன்மதினா பரிதாபமாக இறந்தாள். சிறுமியின் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    அவளது உடலை பார்த்து பெற்றோர் உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி அருகே கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதிய விபத்தில் தாலுகா அலுவலக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபி:

    கோபி ஆஞ்சநேயர் வீதியை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 57). நம்பியூர் தாலுகா அலுவலக ஊழியர்.

    இவர் நேற்று பணிக்கு சென்றார். பணி முடிந்து மாலையில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

    கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக பின்னால் வந்த கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதின.

    இதில் ராபர்ட் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந் தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் கொண்டு செல்லும் வழியில் ராபர்ட் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேனை ஓட்டி வந்த கந்தசாமி என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×