search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GOD idols"

    • பூசாரி இன்று காலை பார்த்தபோது அம்மன் சிலைகள் மீது சாணத்தை எரிந்து அவமதிப்பு செய்திருந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அம்மன் சிலைகளை அவமதிப்பு செய்த நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மீனாட்சிபுரத்தில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் இன்று காலை பார்த்தபோது அம்மன் சிலைகள் மீது சாணத்தை எரிந்து அவமதிப்பு செய்திருந்தனர்.

    இதைபார்த்த பூசாரி அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து எரியோடு போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அம்மன் சிலைகளை அவமதிப்பு செய்த நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அசுத்தம் செய்யப்பட்ட சாமி சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பூஜைகள் நடத்தப்பட்டது.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தி இருந்தது.
    • உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை நடை திறந்தபோது அங்கு உள்ள 63 நாயன்மார் சாமி சிலைகளின் துணிகளை அகற்றியும், அதன் மேலிருந்த சிமெண்டால் கட்டப்பட்ட கலசம் போன்ற அமைப்புகளை உடைத்தும், உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தியும் இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயல் அதிகாரி மருதுபாண்டியன் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ராஜகோபுரத்தில் பதுங்கி இருந்த சேவூர் அருகே சாவக்காட்டுப்பாளையம் அரவங்காடு தத்தனூரை சேர்ந்த தையல் தொழிலாளி சரவணபாரதி (வயது 32) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு பணம் தேவைப்பட்டதால் குறுக்கு வழியில் திருடலாம் என நினைத்து அவினாசி வந்த அவர், கடந்த 22-ந் தேதி மாலை கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அங்கேயே அமர்ந்து அவர் உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    பின்னர் இரவு 11 மணிக்கு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி கோவிலுக்குள் இருந்த பித்தளை வேலை எடுத்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளார். இரவு முழுவதும் கோவிலுக்குள் இருந்தவர் அவ்வப்போது மனநிலைக்கு ஏற்ப இவ்வாறு செய்துள்ளார். கோவிலில் சாமி சிலைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. எந்த அரசியல் அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கை துரிதமான முறையில் விசாரித்து சம்பவம் நடந்த அன்றே வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×