என் மலர்
நீங்கள் தேடியது "Gold medalist"
- சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
- காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
தங்கப்பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை ஹியாங் யா கியாங்யிடம் எதிர்பாராத நேரத்தில் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.
அப்போது, லியூ தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு "என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத ஹியாங் ஆனந்த கண்ணீரில் தத்தளித்தார்.
பின்னர், லியூ யூசேனின் காதலை ஏற்பதாக தலையை அசைத்த ஹியாங் யா கியாங்க் மோதிரத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார். லியூ யூசேன் மோதிரத்தை அணிவித்தார்.
இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரோபோஸ் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பழனிராசு. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி இளஞ்சியம். இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகளான நிவேதா, இந்தோ நேபாள் சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்று, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து ஊருக்கு திரும்பிய நிவேதிதாவை, போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரை க.கொ.க.கண்ணன் எம்.எல்.ஏ.வும் பாராட்டினார். இது குறித்து நிவேதிதா கூறுகையில், இந்த போட்டியில் பங்கேற்க சென்ற போதுதான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், போட்டியில் இலக்கை 12.58 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றதாகவும், இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம், என்றும் கூறினார்.
- என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்ஷாதேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார்.
- மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உடுமலை :
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எஸ்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்ஷா தேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார்.
இதையடுத்து திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் மங்களம் ரவி உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர்கள் வக்கீல் சீனிவாசன், சிவசங்கர், துணை தலைவர் குப்புசாமி, பொருளாளர் அய்யப்பசாமி, நிர்வாகிகள் கண்ணப்பன், ரஜினி பிரசாந்த், சித்தார்த்தன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.