என் மலர்
நீங்கள் தேடியது "Gomathi Elephant"
- சங்கரநாராயணசாமி கோவில் யானையை பக்தர்கள் கோமதி என்று அன்போடு அழைப்பார்கள்.
- நேற்று கோமதி யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கோவில் யானை உள்ளது. இந்த யானையை பக்தர்கள் கோமதி என்று அன்போடு அழைப்பார்கள். தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரால் 1997-ம் ஆண்டு கோவிலுக்கு இந்த யானை வழங்கப்பட்டது. கோமதி யானைக்கு நேற்று 28-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மேலும் யானைக்கு பக்தர்கள் பழங்கள் வாங்கி கொடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் கோமதி யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து யானைக்கு அதிக அளவில் பழங்கள் வாங்கி கொடுத்து "கஜ" பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.