search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goods Trading Corporation"

    • சேனாதிபதிபாளையத்தில் அமைந்துள்ள வட்டக் கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிராபகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • இதில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினையும் மற்றும் அங்கு பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சேனாதிபதிபாளையத்தில் அமைந்துள்ள வட்டக் கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிராபகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் ஈரோடு சேனாதிபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கு மற்றும் சாக்குக்கிடங்கு ஆகியவற்றையும், ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் எண் -2 மற்றும் எண்-7 ஆகியவற்றை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினையும் மற்றும் அங்கு பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

    மேலும் ஈரோடு சேனாதிபதிபாளையம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர் களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது ஈரோடு மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்)முருகேசன், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மனோகரன், ஈரோடு வட்ட வழங்கல் அலுவலர் அன்னபூரணி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×