என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goundamani"

    • இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கும் திரைப்படம் ‘பழனிச்சாமி வாத்தியார்’.
    • இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் தனக்கே உரிய நகைச்சுவை பாணியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'படத்தில் நடித்திருந்தார்.


    பழனிச்சாமி வாத்தியார் பூஜை

    இதைத்தொடர்ந்து 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கவுண்டமணி நடிப்பில் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ள திரைப்படம் 'பழனிச்சாமி வாத்தியார்'. இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பழனிச்சாமி வாத்தியார் பூஜை

    வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வயது மூப்பு காரணமாக இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார்.
    • இயக்குனநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன் (வயது68). இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கினார்.

     

    கவுண்டமணி - செந்தில்

    கவுண்டமணி - செந்தில்


    சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடு உள்ளது. அங்கு தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் இருவரும் இயக்குனநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.


    • நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார்.
    • கோடைகால விடுமுறையின் போது படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா'திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

    இந்தபடம் அரசியல், நகைச்சுவை மிக்க கதை அம்சத்தில் உருவாகியுள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்','கிச்சா வயசு 16'படங்களை இயக்கி உள்ளார்.

    இந்நிலையில், கவுண்டமணியை ஹீரோவாக வைத்து 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தை இயக்கி வந்தார். படத்தை சசி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. யோகிபாபு, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு, சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரரும் நடித்துள்ளனர். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து உள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் நிலை மற்றும் தேர்தல், ஓட்டு தொடர்பான காமெடிகளை மையமாக வைத்து படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், கோடைகால விடுமுறையின் போது படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம்
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

    'காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'  .சினி கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி எழுத்தாளர் சாய் ராஜகோபால் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.




    கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் சென்னை பரணி' டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகத்துடன் கவுண்டமணி 'டப்பிங்' பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    இந்த படம் குறித்து இயக்குநர் சாய் ராஜகோபால் கூறியதாவது :-

    "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.




     


    எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

    'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.இப்படம் 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த நகைச்சுவை படம் ஆகும்.

    கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படுவதாக அமைந்து உள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள்."என்று கூறினார்.

    • வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.
    • ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் கடந்த 1996-ம் ஆண்டு நளினிபாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கி அதை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்.

    கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாக ரூ.3 கோடியே 58 லட்சத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை ரூ.ஒரு கோடியே 4 லட்சம் செலுத்திய நிலையில், 2003-ம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக் கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது, அதன்படி ஆய்வு நடத்திய வழக்கறிஞர் ஆணையர், கவுண்டமணி வழங்கிய நிலத்தில் வெறும் ரூ.46 லட்சத்து 51 ஆயிரத்துக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், நடிகர் கவுண்டமணியிடம் இருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும தீர்ப்பளித்தது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "ஒப்பந்தத்தை போட்டுவிட்டு அதை முடித்து கொடுக்க இருப்பதை எப்படி ஏற்க முடியும்" என்று கூறி மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தனர்.

    • நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா'திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.
    • இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் இன்றியமையாத நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் கவுண்டமணி. இதுவரை பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்த நடிகர். அதற்கு பின் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். பின் வயதின் காரணமாக படங்களில் நடிப்பதை குறித்துக் கொண்டார்

    நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா'திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.

    இந்தபடம் அரசியல், நகைச்சுவை மிக்க கதை அம்சத்தில் உருவாகியுள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்','கிச்சா வயசு 16'படங்களை இயக்கி உள்ளார்.

    படத்தை சசி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. யோகிபாபு, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு, சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரரும் நடித்துள்ளனர். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து உள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் நிலை மற்றும் தேர்தல், ஓட்டு தொடர்பான காமெடிகளை மையமாக வைத்து படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் இன்று பதவி ஏற்கும் விழா நடைப்பெறுவதை ஒட்டி படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பதவியேற்பு விழா என்ற தலைப்பும் , விரைவில் மக்களையும் காண வருகிறார் என நக்கலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'.
    • துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

     துப்பாக்கி' படத்தில் விஜய்யின் வாழைப்பழ காமெடி.. வைரலாகும் வீடியோ

    ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'. விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகவும் துப்பாக்கி அமைந்தது. விடுமுறையில் ஊருக்கு வரும் ராணுவ வீரன் மும்பை நகருக்குள் ஸ்லீப்பர் செல்களாக இயங்கும் தீவிரவாதிகளுடன் மோதும் கதைக்களத்தை கொண்ட இப்படம் எந்த இடத்திலும் லேக் ஆகாமல் விறுவிறுப்பாக செல்லும்.

     

    விஜய்க்கும் கதாநாயகி காஜல் அகர்வாலுக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தியிருக்கும். சீரியஸான கதைக்களம் என்றாலும் விஜய்யின் சிறு சிறு மேனரிசம்களும் டயலாக்களும் அவ்வப்போது மெல்லிய சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமாவின் கிளாசிக் படமான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி செந்திலின் பல காமெடி காட்சிகள் டிரெண்ட்செட்டர்களாக மாறின. அதில் ஒன்று வாழைப்பழ காமெடி. பணம் கொடுத்து செந்திலை 2 வாழைப்பழம் வாங்கி வர சொல்வார் கவுண்டமணி. ஆனால் செந்தில் 2 பழத்தை வாங்கி அதில் ஒன்றை வரும் வழியிலேயே சாப்பிட்டு விடுவார். கவுண்டமணி 1 பழம் மட்டுமே இருப்பதை பார்த்துவிட்டு மற்றோரு பழம் எங்கே என கேட்பார். அதற்கு செந்தில் அது தான் அண்ணே இது என கூற அங்கு களேபரமே ஏற்பட்டுவிடும்.

     

    தற்போது வெளியாகி உள்ள துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் இந்த காமெடியை கதைப்படி மும்பையில் தனது நண்பன் வேலை பார்க்கும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு ஹிந்தியில் மிமிக்கிரி செய்து சிரிக்க வைக்கிறார் ஜெக்தீஷ். அதாவது கதைப்படி ஜெக்தீஷாக நடிக்கும் விஜய். இந்த டேலிட்டட் காட்சிகள் வைரலான நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.

    இதற்கிடையில் ஜூன் 22 விஜய் பிறந்தநாள் வர உள்ள நிலையில் ஜூன் 21 ஆம் தேதி துப்பாக்கி படம் ரீரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ஒத்த ஓட்டு முத்தையா.
    • யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர்.

    இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர்.

    இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாக்யராஜ், பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கவுண்டமணி பேசும்போது கூறியதாவது:-

    என்ன பேசுறது என்று தெரியவில்லை. எல்லோரும் பேசி விட்டார்கள். நான் என்னத்த பேசுறது. எல்லோரும் ஒத்த ஓட்டு முத்தையாவை பற்றிதான் பேசியுள்ளனர். நான் அவ்வளவு பேச வேண்டியதில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவி ராஜா படத்தை சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். ஒத்த ஓட்டு முத்தையா குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். குடும்பத்துடன் பாருங்கள்.

    பி. வாசுவின் 24 படத்தின் நான் நடித்திருக்கிறேன் எனக் கூறினார். 24 படங்களும் வெற்றி. அவருக்கு என்னுடைய நன்றி. பாக்யராஜ் என்னுடைய ரூம் மெட். அவரை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் கே. ராஜன் என்னுடைய நண்பர். அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    டைரக்டர் சாய் ராஜகோபால் காமெடி எழுத்தாளர். காமெடியாக இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம். தவறாமல் படம் பாருங்கள்.

    ஒத்த ஓட்டு முத்தையா படத்தை பாருங்கள்... இந்த ஒத்த ஓட்டு முத்தையாவை நன்றாக பாருங்கள்... இந்த ஒத்த ஓட்டு முத்தையாவை திரும்ப பாருங்கள்... நாம் திரும்பவும் சொல்கிறேன் ஒத்த ஒட்டு முத்தையாவை பாருங்கள். திரும்ப திரும்ப சொல்கிறேன் ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள்... திரும்பி பார்த்து விட்டும் சொல்கிறேன், ஒத்த ஒட்டு முத்தையாவை பாருங்கள். மறந்து விடாதீர்கள்.

    ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்ற வேண்டியது உங்களது கடமை. உங்களுடைய பொறுப்பு. நன்றி வணக்கம், Welcome, Thank You" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது.
    • கவுண்டமணியின் பேச்சு அரங்கத்தில் சிரிப்பலையை எழுப்பியது.

    இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர்.

    இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாக்யராஜ், பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கவுண்டமணி பேசும்போது கூறியதாவது:-

    இந்த விழாவிற்கும் வந்திருக்கும் ரசிகர்கள், வராத ரசிகர்கள், வீட்டிலேயே இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    கவுண்டமணியின் இந்த பேச்சு அரங்கத்தில் சிரிப்பலையை எழுப்பியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா.
    • இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது.

    இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர்.

    இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாக்யராஜ், பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கவுண்டமனி பேசியது இணையத்தில் அதிகமாக பரவியது.

    10 வருடங்களுக்கு பிறகு கவுண்டமணி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. குடி ஸ்டோரி பிக்சர்ஸ் மற்றும் சினி கிராஃப்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் இசையை சித்தார்த் விபின் மேற்கொண்டுள்ளார். திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

    சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

    சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் மிகப்பெரிய இடைவேளை எடுத்த கவுண்டமணி கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்திருந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக ஓய்வெடுத்து வந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் கவுண்டமணியை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.


    சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

    சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

    தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பெரியப்பா கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாகவும், இதில் நடிக்க கவுண்டமணி சில நிபந்தனைகளை விதித்தாகவும் கூறப்படுகிறது. அதற்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்ததால் கவுண்டமணி நடிப்பது உறுதியாகி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    காமெடி நடிகர் செந்தில் அளித்த பேட்டியில், ஐயாயிரம் சம்பளமாக பெற்று, படிப்படியாக முன்னேறி மக்கள் மனங்களில் இடம்பிடித்தது தான் பெரிய மகிழ்ச்சி என்றார். #Senthil
    நடிகர் செந்தில், தன்னுடைய அனுபவங்களை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    இன்றைக்கு லட்சம் கோடி என்று எல்லாம் சம்பளம் பேசுகிறோம். ஆனால் அன்றைக்கு ஐயாயிரம் தான் சம்பளமாக கிடைத்தது. படிப்படியா முன்னுக்கு வந்து, மக்கள் மனங்களில் இடம்பிடித்ததுதான் பெரிய சந்தோ‌ஷம்.

    இன்று சினிமாவை டிஜிட்டலில் எடுக்கிறோம். அப்போது பிலிம் ரோலில்தான் எடுக்க வெண்டும். ஏகப்பட்ட செலவாகும். படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பின்போது எவ்வளவு பிலிம் ரோல் ஆகுது? யார் எல்லாம் டேக் அதிகமாக வாங்கி பிலிம் ரோலை வீணடிக்கிறார்கள்? என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.



    அப்படித்தான் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் பெட்ரோமாக்ஸ் காட்சியும் படமாக்கப்பட்டது. எப்படிண்ணே இதுல எரியுது என்று கேட்டு ஒரே டேக்கில் உடைத்தேன். இயக்குனர், தயாரிப்பாளர், கவுண்டமணி ஆகிய எல்லோருக்குமே மகிழ்ச்சி. அந்த காட்சி இன்றைக்கும் பேசப்பட நான் மட்டுமே காரணம் அல்ல. கவுண்டமணி அண்ணனும் தான்’. இவ்வாறு அவர் கூறினார். #Senthil

    ×