என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Government high school"
- பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
- நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
உடுமலை :
உடுமலைஅடுத்த பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சின்ன வாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் அம்மாபட்டி, வடபூதிநத்தம் ,மொடக்குப்பட்டி, தீபாலபட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாண வர்கள் படித்து வருகிறார்கள்.
நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. ஆனால் விளையாட்டில் பின்தங்கி உள்ளது. மைதானம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி உள்ளது இதற்கு காரணமாகும். இது குறித்து சமூக ஆர்வ லர்கள் கூறுகையில்:- இந்தப் பள்ளி மைதானம் உடுமலை அளவில் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக கோடை காலத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடைபெறும். ஆனால் சமீப காலமாக பள்ளி மைதானத்தை பராமரிப்பு செய்வதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக மைதானத்தைச் சுற்றிலும் புதர் மண்டி உள்ளது. இதனால் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க முடியாத சூழல் உள்ளது. செல்போன் விளையாட்டில் குழந்தைகள் மூழ்கி வரும் சூழலில் தரமான மைதானம் இருந்தும் அதை முறையாக பராமரிக்காததால் குழந்தைகள்ஓடியாடி வியர்க்கவிறுவிறுக்க விளையாட முடியாத சூழல் உள்ளது. மைதானம் சிறப்பாக இருந்து முறையான பயிற்சி கிடைத்தால் கிராமத்து மாணவர்கள் விளையா ட்டில் மாவட்ட மாநில அளவில் சாதிக்கலாம்.
ஆனால்மைதானத்தை சீரமைக்கநிர்வாகம் அக்கறைகாட்டாதது வேதனை அளிக்கிறது. எனவே நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை சீரமை ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் படிப்பில்சாதித்த மாநிலமாணவர்கள் விளையாட்டிலும் சாதிக்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பெற்றோர் - மாணவர்கள் எதிர்பார்ப்பு
- அடிக்கடி சிறிய பராமரிப்பு களின் காரணமாக வெளித் தோற்றம் பொலிவுடன் இருந்தாலும், உட்புறம் மிகவும் பலவீனமாக உள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ஆரோக்கிய அன்னை ஆலயம் எதிரே அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் அரியாங்குப்பம், வீராம் பட்டினம், சின்ன வீராம்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் 1925-ம் ஆண்டு கட்டப்பட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் இந்த பள்ளி நூற்றாண்டு விழா காண உள்ளது.
இந்த பள்ளியில் படித்த பலர் அரசு துறைகளிலும், முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர். பெருமைமிக்க பள்ளியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் நூற்றாண்டு விழா காண உள்ள பள்ளியின் கட்டிட நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அடிக்கடி சிறிய பராமரிப்புகளின் காரணமாக வெளித் தோற்றம் பொலிவுடன் இருந்தாலும், உட்புறம் மிகவும் பலவீனமாக உள்ளது. பள்ளியின் முக்கிய தூண்கள் பலமிழந்துள்ளது.
பள்ளி கட்டடத்தின் மேற்கூரைகளின் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடன் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே சிறுவர் சீர்திருத்த பள்ளி இருந்தது. இது காலாப்பட்டு மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதால் சிறுவர் சீர்திருத்த பள்ளி வாரம் ஒரு நாள் வழக்கு விசாரணைக்கு மட்டுமே திறக்கப்படுகிறது.
அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, சிறுவர் சீர்திருத்த பள்ளி இரண்டை யும் இணைத்து புதுப்பொலி வுடன் அரசு உயர்நிலைப்பள்ளி கட்ட வேண்டும். நூற்றாண்டுக்கு முன்பாக புதிய அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை கட்டி முடித்து திறக்க வேண்டும்.
இந்த பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு நிகராக சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாற்றித்தர வேண்டும் என பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள், அப்பகு தியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பாஸ்கர் எம்.எல்.ஏவையும் பொதுமக்கள் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகளும், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயமும் பாரம்பரியமான, புக ழ்பெற்ற அரியாங்குப்பம் உயர்நிலைப் பள்ளியை புதுப்பித்து கட்டி, நூற்றாண்டு விழாவை கொண்டாட நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே இப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- விழுப்புரம் அருகே பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
- ராஜ்பிரியன் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
விழுப்புரம் :
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். அவரது மகன் ராஜ்பிரியன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவன் ராஜ்பிரியன் தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். உடனே சக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். என்றாலும் ராஜ்பிரியன் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ராஜ்பிரியன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராஜ்பிரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கோவை இருகூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளி ஊருக்கு தெற்கே ரெயில்வே பாதையை தாண்டி அமைந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வர தினமும் ரெயில்பாதையை கடந்து வர வேண்டி உள்ளது. எனவே ரெயில்பாதையை கடந்து செல்ல சுரங்கபாதை அமைக்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.
இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி சிங்காநல்லூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன், தினேஷ், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாரியப்பன், ரவிந்திரன், பாலகிருஷ்ணன், குருசாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின், பிரபாகரன், காவ்யா மற்றும் சிலர் சட்டவிரோதமாக கூடி, மாணவ, மாணவிகளை திரட்டி பள்ளி கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதன்பேரில் கோகுல் கிருஷ்ணன் உள்பட 9 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், மாணவர்களை தடுத்தல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்