என் மலர்
நீங்கள் தேடியது "Governor of nagaland"
- நாகலாந்து மாநில கவர்னர் இல. கணேசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.
- இன்று மாலை தூத்துக்குடி யில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் ‘இந்தியாவின் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார்.
தூத்துக்குடி:
நாகலாந்து மாநில கவர்னர் இல. கணேசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.
அவருக்கு தமிழக பா.ஜ.க. வர்த்தக அணி தலைவர் ராஜா கண்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், பொதுச் செயலாளர் உமரி சத்திய சீலன், விவேகம் ரமேஷ், வீரமணி, மாதவன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்த னர்.
அப்போது நிருபர்களை சந்தித்த கவர்னர் இல.கணேசன் 'அனைவருக்கும் வணக்கம், பேட்டி வேண்டாம்' என கூறிவிட்டு அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார்.
இன்று மாலை தூத்துக்குடி யில் அகில இந்திய வர்த்தக தொழி ற்சங்கத்தில் தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் 'இந்தியாவின் முன்னேற்றம்' என்ற தலைப்பில் நடைபெற உள்ள கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார்.
கவர்னர் இல. கணேசன் வந்த அதே விமானத்தில் மொரிசியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங்கும் தூத்துக்குடி வந்தார். பின்னர் அவர் நெல்லையில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார்.
- உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.
- கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாகாலாந்து கவர்னர் இலா. கணேசன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். மேலும், உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.
கோவிலுக்கு வந்த இலா.கணேசனுக்கு அழிஞ்சிவாக்கம் பாஸ்கர் தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.