search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt bus repair"

    • திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை நடு வழியிலிருந்து தள்ளி சற்று ஓரமாக நிறுத்த உதவினர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை முதலே மழை பெய்து கொண்டிருந்த நிலையில், திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த பஸ் பல்லடம் பனப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென பிரேக் டவுன் ஆகியது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை நடு வழியிலிருந்து தள்ளி சற்று ஓரமாக நிறுத்த உதவினர்.

    இதற்கிடையே காலை நேரமானதால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் நடுவழியில் அரசு பேருந்து நின்றதால் பல்லடத்தில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த போக்குவரத்து நெரிசலால், பல்லடம் நகரமே திக்கு முக்காடி போனது. பின்னர் ஒரு வழியாக ஓட்டுநர் அந்தப் பேருந்தை இயக்கி பனி மனைக்கு எடுத்துச் சென்றார். இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    • நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது.
    • பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து விளக்கு அருகே நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதேபோல் ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ்சும் பழுதாகி அடுத்தடுத்து நின்றது.

    இதனால் அதில் இருந்த பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சாலையோரம் காத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவ்வழியே வந்த மாற்று பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அங்கிருந்த பயணிகள் கூறியதாவது:-

    ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் சென்ற பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்குள் பழுது ஏற்பட்டு ஓடியதால் அதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

    பயணிகள் கோரிக்கை

    நெல்லை- தென்காசி சாலையில் பழுதான பஸ்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. அதில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரிவர செல்ல முடியாமல் போகும் சூழ்நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×