search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Graeme smith"

    • உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார்.
    • சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் லக்னோ - ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 75* (28), டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள் அடித்து 9.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது.

    இதனால் கோபமடைந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா போட்டியின் முடிவில் கேப்டன் கேஎல் ராகுலை திட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலனாது. இதற்கு ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் 16 கோடி சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை இப்படி திட்டலாமா? என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை திட்டுவது சரியல்ல என்று முன்னாள் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் கிரேம் ஸ்மித் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார். ஏனெனில் அவருடைய அணி முழுமையான தோல்வியை சந்தித்ததால் உணர்ச்சிகள் உருண்டோடின. இருப்பினும் இந்த உரையாடல்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடந்திருக்க வேண்டும். சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.

    என்று கூறினார். 

    டி வில்லியர்ஸ் அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை வரை விளையாடியிருக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஏபி டி வில்லியர்ஸ் கடந்த வாரம் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகக்கோப்பையை கைப்பற்றுவதே தனது இலக்கு என்ற ஒரே நோக்கத்துடன் இருந்த டி வில்லியர்ஸ் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற்றது தென்ஆப்பிரிக்காவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் உலகக் கோப்பைக்குப்பின் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் தென்ஆப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.



    இதுகுறித்து கிரேம் ஸ்மித் கூறுகையில் ‘‘ஓய்வு குறித்து டி வில்லியர்ஸ் அதிக அளவில் யோசித்திருப்பார். உலகக்கோப்பைக்கு பிறகு டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றிருக்கனும். அவர் சிறிது காலம் விளையாடமல் இருந்து அதன்பின் அணிக்கு திரும்பி இந்தியா, ஆஸ்திரேலியா தொடரின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினார்.

    இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று நான் நினைக்கவில்லை. உச்சக்கட்டாக மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். அவர் ஒரு சிறப்பு வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதால் மக்கள் அவரை மிஸ் செய்யப் போகிறார்கள். டி வில்லியர்ஸ் அதிக காலம் விளையாட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள்’’ என்றார்.
    ×