search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grammy Award"

    • கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.
    • ஜெய் இசட்டுக்கு இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது.

    இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. அந்த வகையில் 66-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக பாடகர் சங்கர் மகாதேவன் குழுவினர் உள்பட பலருக்கு கிராமி விருது வழங்கப் பட்டது.


    இதுபோன்று அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று பெற்றுக் கொண்டார்.


    விருதை பெற்ற மகிழ்ச்சியில் ஜெய் இசட் மேடையில் இருந்து கீழே வந்து தனது சக நண்பர்களுடன் விருதை கொண்டாடும் வகையில் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார். அவர் விருது கோப்பையில் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


    • ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.

    இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.


    இந்த ஆல்பத்திற்கு உயரிய கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. திஸ் மொமண்ட் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது. விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தியாவிற்கு கிராமி மழை பொழிகிறது" என்று குறிப்பிட்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    • மிகவும் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் ஷகீரா.
    • இவர் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

    பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகிரா (வயது 45). கொலம்பியன் பாடகரான இவர் பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். லாண்டரி சர்வீஸ் (Laundry Service) என்கிற ஆல்பத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஷகீரா.


    2010-ஆம் ஆண்டு உலக கோப்பை கால் பந்து போட்டியில் இவர் பாடிய 'ஷமினா மினா ஓய்..ஓய்.. வக்கா..வக்கா' பாடல் உலகம் முழுவதும் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. கிராமி விருதுகள், இசை விருதுகள் என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.


    ஷகிராவின் சிலை

    இந்நிலையில், பாடகி ஷகீராவிற்கு அவரது சொந்த ஊரான கொலம்பியாவில் உள்ள பரன்குவிலரஸில் 21 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கலைஞர் யினோ மார்க்ஸ் வடிவமைத்துள்ளார். இந்த சிலை கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'ஹிப்ஸ் டோண்ட் லை' (Hips don't lie) என்ற ஆல்பத்தில் ஷகிராவின் தனித்துவமான நடன அசைவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலை ஷகீராவின் தந்தை, தாய் மற்றும் பரன்குவிலரஸ் மேயர் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஷகீரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    • 2024-ம் ஆண்டிற்கான 66-வது கிராமி விருதுகள் அடுத்த 85 நாட்களில் நடைபெறுகிறது.
    • பிரதமர் மோடி இயற்றிய பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    வரும் 2024-ம் ஆண்டிற்கான 66வது கிராமி விருதுகள் அடுத்த 85 நாட்களில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் ‛அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்' என்ற பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என விருது வழங்கும் அமைப்பு சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளது.

    சிறு தானியங்களை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்திய அமெரிக்க பாடகர் பால்குனி ஷா இணைந்து இயற்றியுள்ளார்.

    இந்தப் பாடலில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி சிறு தானியங்கள் குறித்து பேசும் காட்சிகளும் இடம் பிடித்துள்ளன.

    ×