search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grand Inauguration Ceremony"

    • மோடியின் பதவியேற்பு விழா இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது.
    • நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் பதவியேற்பு விழாவுக்கு வருகை.

    நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

    இன்று இன்னும் சற்று நேரத்தில் பிரதமராக மோடி பொறுப்பேற்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கிறது.

    மோடியின் பதவியேற்பு விழா இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக திரைப்பிரபலங்கள், அரசியல் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்துள்ளார்.

    பூட்டான், நேபாளம் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு.

    வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியேற்பு விழாவிற்கு வருகை.

    நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, அஜித் பவார் ஆகியோர் பங்கேற்பு. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விழாவுக்கு வருகை.

    முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

    பாஜக தலைவர் ஸ்மிருதி இரானி பதவியேற்பு விழா ராஷ்டிரபதி பவன் முன்புறத்தில் நடைபெற்றது.

    மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்தார்.

    பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே பதவியேற்பு விழாவிற்கு ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்தார்.

    நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு விழா ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

    ×