search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grand welcome"

    • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
    • நகர தி.மு.க. அலுவலகத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புளியங்குடி:

    புளியங்குடியில் முதல்-அமைச்சர் வருகிற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருவதை ஒட்டிய சிறப்பு ஆலோசனை கூட்டம் நகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

    நகர அவைதலைவர் வேல்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்குகிறார். நலத்திட்ட உதவிகள் முடிந்தவுடன் புளியங்குடி வழியாக செல்லும் அவருக்கு 3 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதலாவதாக நமது மாவட்டத்தின் தொடக்க எல்லையில் நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் தலைமையில் டி.என்.புதுக்குடி காமராஜர் சிலை அருகிலும், அடுத்து புளியங்குடி பஸ் நிலையம் முன்பு பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது தலைமையிலும், 3-வதாக சிந்தாமணியில் நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமையிலும் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நகர தி.மு.க. அலுவலகத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான தி.மு.க. நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×