என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green Tribunal Committee"

    • மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று தொடங்கியது.
    • கேரளாவில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.

    நெல்லை:

    கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி அருகே உள்ள கோடக நல்லூர், கொண்டாநகரம், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூட்டை மூட்டைகளாக மருத்துவக் கழிவுகளான ஊசிகள், கையுறைகள், ரத்தம் படிந்த பொருட்கள், மருந்து பாட்டில்கள் என மலைபோல் கொட்டப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த கழிவுகளால் பொது சுகாதாரத்திற்கு கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் நிலைகள் மாசுபடும் அபாயமும் இருந்ததால் இது சம்பந்தமாக முக்கூடல், சீதபற்பநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.


    அதில் திருவனந்தபுரத்தில் உள்ள சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள கழிவுகளை ஏற்றி வாகனத்தில் கொண்டு வந்து அரசு வழிமுறைகளை பின்பற்றாமல் சுத்தமல்லி பகுதிகளில் கொட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக சுத்தமல்லியை சேர்ந்த மாயாண்டி, மனோகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கினர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிய சேலம் மாவட்டம், நடுபட்டி, இலத்தூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (37) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான கேரள மாநிலம், கன்னூர், இடாவேலியை சேர்ந்த ஜித்தன் ஜேர்ச் (40) என்பவரை கைது செய்தனர்.

    இதனிடையே பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த கழிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தி, அவை அனைத்தையும் 3 நாட்களுக்குள் கேரள அரசே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளா வில் இருந்து அந்த கழிவுகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னர் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று காலை தொடங்கியது.

    இதற்காக கேரளாவில் இருந்து சப்-கலெக்டர் ஆல்பர்ட் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.

    பின்னர் கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து கழிவுகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. மேலும் கழிவுகளை ஏற்றி செல்வதற்காக கேரள பதிவெண் கொண்ட 16 லாரிகள் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டன.

    இதில் முதல் கட்டமாக திருவனந்தபுரம், நாகர்கோவில் நாங்குநேரி வழியாக 8 கேரளா லாரிகளும், கோட்டயம், புளியரை, செங்கோட்டை, தென்காசி வழியாக 3 கேரளா லாரிகளும் என மொத்தம் 11 லாரிகள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.

    அதனைத்தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் முன்னிலையில் நடுக்கல்லூர் அரசு பள்ளியில் வைத்து கேரள அதிகாரிகள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், திருவனந்தபுரம் மாவட்ட உதவி கலெக்டர் சாக்ஷி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அந்த லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை கேரளாவுக்கு செல்வதை உறுதி செய்ய தமிழக-கேரள எல்லைகள் வரை தமிழக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. 

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு சென்னையில் 24-ந் தேதி விசாரணை நடத்துகிறது. #ThoothukudiSterlite #SterliteCase
    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

    இந்தக்குழு சென்னை சேப்பாக்கம் எழிலகம் கலசமகாலில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு விசாரணை நடத்துகிறது. இந்த அறிவிப்பை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தொடர்பாகவோ அல்லது ஆதரவு தொடர்பாகவோ மனு அளிக்க விரும்புபவர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ThoothukudiSterlite #SterliteCase
    தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. #ThoothukudiSterlite #SterliteCase #TNGovt #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ‘தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஆய்வுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது’ என்று கடந்த 10-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தமிழக அரசுக்கு தகவல் வந்தது.

    இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் குழுவின் வருகைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து பெங்களூருவில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல இயக்குனருக்கு தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நீங்கள் எழுதிய கடிதம் கடந்த 17-ந் தேதி எங்களுக்கு கிடைத்தது. அதில், 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சென்னை மற்றும் தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தை (ஸ்டெர்லைட்) பார்வையிடுவதற்கு கமிட்டி வருவதாக பயண திட்டத்தை குறிப்பிட்டு இருந்தீர்கள்.

    இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் தன்மை குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்விலும் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.



    அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் 10.9.18 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யவேண்டும் என்று அந்த கோர்ட்டில் 14-ந் தேதியன்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    அதோடு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அப்பீல் வழக்கை எதிர்த்தும், தமிழக அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகார எல்லை குறித்தும் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், கமிட்டி பார்வையிடும் நிகழ்வை தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    எனவே, கமிட்டியின் திட்டமிடப்பட்டுள்ள பயணத்தை ரத்து செய்ய வேண்டும். அதோடு கமிட்டியின் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த புதிய மனு ஒன்று தீர்ப்பாயத்தின் தலைமை நடுவர் நீதிபதி ஏ.கே.கோயல், நீதிபதிகள் எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு வக்கீல்கள் யோகேஷ் கன்னா, ராகேஷ் சர்மா, பா.வினோத் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

    ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வக்கீல் ரோகிணி மூசா ஆஜராகி, ‘ஏற்கனவே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளபடி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக வளாகத்தில் நிர்வாக பணிகள், பராமரிப்பு பணிகளுக்கான அனுமதி மற்றும் தாமிர மூலப்பொருட்களை அகற்றுவதற்கான அனுமதி ஆகியவற்றை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால் எங்கள் நிர்வாகத்துக்கு நாளுக்கு நாள் பெருமளவில் பொருளாதார இழப்பீடு ஏற்படுகிறது. பணிகள் பெருமளவில் தடைபட்டுள்ளன. எனவே மேற்கண்ட பணிகளுக்கான அனுமதியை உடனடியாக வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கின் முகாந்திரம் குறித்த சீராய்வு மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நாளுக்கு ஒன்றாக புதிது புதிதாக கோரிக்கைகள் முன்வைப்பதை அனுமதிக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது.

    இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தங்கள் கோரிக்கைகளை தீர்ப்பாயம் நியமனம் செய்துள்ள நீதிபதி தருண் அகர்வால் குழுவின் முன்பு எழுத்து வடிவில் தாக்கல் செய்ய அனுமதிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

    இதற்கு தமிழக அரசு வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தங்கள் தரப்பிலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து சிறப்பு குழுவில் மனு தாக்கல் செய்யலாம் என்று எழுத்து வடிவில் உத்தரவு தருமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    இதற்கு தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் இந்த வேண்டுகோளை ஏற்க முடியாது என்றும், ஏற்கனவே தீர்ப்பாயம் ஆகஸ்டு 20-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் குழுவின் முன்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும், அதற்காக தமிழக அரசுக்கு தனியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்.

    இதற்கு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் மிகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தீர்ப்பாயம் இப்படி நடந்து கொள்வது எந்த வகையிலும் சரியல்ல என்றும் தன்னுடைய எதிர்ப்பை உத்தரவில் பதிவு செய்யுமாறும் கூறினார். மேலும், தான் இதுவரை பார்த்ததில் எந்த தீர்ப்பாயமும் இப்படி நடந்து கொண்டது இல்லை என்றும் அவர் மிகக் கடுமையான குரலில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

    இதற்கு நீதிபதி ஏ.கே.கோயல், உங்கள் வாதங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னால் அப்படி எதுவும் எழுத்து வடிவில் உத்தரவு பிறப்பிக்க இயலாது எனவும் கூறி விசாரணையை முடித்து வைப்பதாக கூறினார்.  #ThoothukudiSterlite #SterliteCase #TNGovt  #NGT

    ×