search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GSLV F15"

    • இஸ்ரோவின் என்.வி.எஸ். 02 செயற்கைக்கோளை சுமந்து சென்றது.
    • 2025-ல் இஸ்ரோ செலுத்திய முதல் ராக்கெட்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட் நிலப்பரப்பு, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமாக தகவல்களை தெரிவிக்கும் இஸ்ரோவின் என்.வி.எஸ். 02 செயற்கைக்கோளை சுமந்து சென்றது.

    இஸ்ரோவின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நாராயணன் தலைமையில் விண்ணில் ஏவப்பட்ட முதல் ராக்கெட் இது ஆகும். இஸ்ரோவின் 100-வது ராக்கெட் மற்றும் 2025-ம் ஆண்டு இஸ்ரோ விண்ணில் செலுத்திய முதல் ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    2025-ம் ஆண்டு இஸ்ரோவின் முதல் திட்டம் வெற்றி பெற்றதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இந்த ராக்கெட் சுமந்து சென்ற என்.எஸ்.வி.-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    "செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இது 100-வது திட்டம் என்பதால் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் தற்போதைய நிலவரப்படி அனைத்து சிஸ்டம்களும் திட்டமிட்டப்படி இயங்கி வருகிறது," என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

    முன்னதாக, 27.30 மணி நேர கவுண்ட்டவுன் முடிவுற்ற நிலையில், 50.9 உயரமான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட், இன்று காலை 6.23 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

    மேகமூட்டமான வானத்தில் சுமார் 19 நிமிடங்கள் பயணித்த பிறகு, ராக்கெட் அது சுமந்து சென்ற என்.வி.எஸ்.-02 (NVS-02) வழிசெலுத்தல் செயற்கைக்கோளை வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

    என்.வி.எஸ்.-02 செயற்கைக்கோளின் முக்கிய பயன்பாடுகளாக நிலப்பரப்பு, வான்வழி மற்றும் கடல்சார் வழிசெலுத்தல், விவசாயம், கடற்படை மேலாண்மை, மொபைல் சாதனங்களில் இருப்பிட அடிப்படையிலான சேவைகள், செயற்கைக்கோள்களுக்கான சுற்றுப்பாதை நிர்ணயம், இண்டர்நெட் ஆஃப்-திங்ஸ் (IoT) அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் அவசர கால சேவைகள் உள்ளிட்டவை அடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
    • இந்த ராக்கெட் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் வானை கிழித்துக் கொண்டு புறப்பட்டது.

    இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.53 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தது.

     


    இந்த ராக்கெட் சுமந்து செல்லும் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் புவி சுற்றுப்பாதையில் நிலை நிறத்தப்படுகிறது. இந்த சாதனை விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்தியுள்ளது.


    • சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தகவல்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோளை நாளை விண்ணில் செலுத்துகிறது. இதற்கான 27.30 மணி நேர கவுண்ட் டவுன் இன்று அதிகாலை 2.53 மணிக்கு தொடங்கியது.

    இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப் -15 ராக்கெட் என்.வி.எஸ்.-02 என்ற செயற்கைக்கோளை சுமந்து கொண்டு நாளை (ஜனவரி 29) காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

    நாளை 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்களோ தொழில்நுட்பத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க நிலையை அடையும். இது நாட்டில் ஏற்கனவே வளர்ந்து வரும் விண்வெளி திறனை மேலும் வலுப்படுத்தும்.

    விண்ணில் செலுத்தப்படும் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் இயங்கி வரும் யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் பிற செயற்கைக்கோள் பணி மையங்களின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

    ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது.
    • தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி நாளை காலை 6.23 மணிக்கு, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையல், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது.
    • ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை காலை 5.23 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி 29-ந்தேதி அதாவது நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை 6.23 மணிக்கு, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இந்த சாதனை விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்துகிறது. இது நாட்டில் வளர்ந்து வரும் விண்வெளி திறன்களை வலுப்படுத்துகிறது.

    வழிசெலுத்தும் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது. அத்துடன், இஸ்ரோவிற்குள் உள்ள பிற செயற்கைக்கோள் பணி மையங்களின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டு முயற்சி, செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பில் இஸ்ரோவின் விரிவான உள்நாட்டில் நிபுணத்துவத்தையும், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பத்தை தயாரித்து பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் திறனையும் இது எடுத்துக்காட்டுகிறது.

    இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 5.23 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ×