search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST Council"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் கடந்த 2017, ஜூலை 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும், வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் ஆவார். அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் மீண்டும் பதவியேற்றார்.

    இந்நிலையில், 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் புதுடெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு
    • மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதுகுறித்து துணைக் குழுவின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

    'ஒரே நாடு ஒரே வரி' என்பது போன்ற முழக்கங்களை எழுப்புவது எளிது. ஆனால் செயல்படுத்துவது கடினம். 'ஒரே நாடு ஒரே வரி' என்பது அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டிற்கு சரிவராது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைத்து மாநிலங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்படும் அளவுக்கு எங்களுக்கு நம்பிக்கை வந்தால்தான், உண்மையிலேயே அது 'ஒரே நாடு ஒரே வரி'.

    ஜி.எஸ்.டி. கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். நிஜமாகவே கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகின்ற கூட்டமோ, கவுன்சிலோ இருந்தால், இழப்பீடு தொகை குறித்த விவாதமும் இந்த கவுன்சிலில் தான் நடைபெற வேண்டும். தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரோ, மத்திய அரசோ முடிவெடுத்து, உண்டு, இல்லை என்று சொல்வது நியாயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அறிக்கை சிறிய மாற்றங்கங்களுடன் ஏற்கப்பட்டது.
    • மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும் என தகவல்

    புதுடெல்லி:

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று வழங்கப்படும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து விடுவிக்க உள்ளது. தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும்.

    பென்சில் ஷார்ப்னர் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கவும், தேசிய தேர்வு முகமைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அறிக்கை சிறிய மாற்றங்களுடன் ஏற்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது.
    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார்.

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. நடைபெற உள்ள 49-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்த பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் என்பதால் வர்த்தகத் துறையின் கவனம் இதில் திரும்பியுள்ளது.

    • ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது.
    • நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார்.

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது. நடைபெற உள்ள 49-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்த பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் பிப்ரவரி மாதம் 18-ம் தேதி கூடுகிறது.
    • இந்தக் கூட்டத்துக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார்.

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பிப்ரவரி 18-ம் தேதி கூடுகிறது. நடைபெற உள்ள 49-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்த பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • பயறு வகைகளின் உமி, தவிடு மீதான 5% வரி ரத்து செய்யப்படுகிறது.
    • ஆன்லைன் விளையாட்டு மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை.

    டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சௌத்ரி மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சகம் மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    ஜிஎஸ்டியில் இணக்கத்தை உருவாக்குவதற்கும் வர்த்தக வசதி நடவடிக்கையாகவும் ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் மாற்றங்கள் தொடர்பான பரிந்துரைகள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதன்படி பயறு வகைகளின் உமி, தவிடு மீதான 5% வரி ரத்து செய்யப்படுகிறது. பெட்ரோலுடன் கலப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எத்தைல் ஆல்கஹால் மீதான வரி 18.5% இருந்து 5% ஆகக் குறைக்கப்படுகிறது. 


    நான்கு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு 22% என்ற உயர் அளவான இழப்பீட்டு வரி விகிதம் பொருந்தும். ரூபே கடன் அட்டைகள், குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்குரிய பிம் யுபிஐ ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் வங்கிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கு வரிவிதிப்பு கிடையாது. புதிதாக எந்த பொருள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை.

    ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதவர்களுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுகின்ற நடைமுறை இப்போது இல்லை. எனவே இதில் மாற்றம் கொண்டுவர சிஜிஎஸ்டி விதிகள் 2017ல் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்தது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இடையே இ-வணிக ஆப்ரேட்டர்கள் மூலம் பொருள்கள் மற்றும் சேவைகள் வழங்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 


    நேரமின்மை காரணமாக பான் மசாலா மற்றும் குட்கா வணிகங்களில் வரி ஏய்ப்பைத் தடுக்கும் பிரச்சினை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. மேலும் ஆன்லைன் விளையாட்டு மற்றும் கேசினோக்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்தும் விவாதிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய நிதித்துறை இணை மந்திரி மற்றும் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
    • ஆன்லைன் கேமிங், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து ஆலோசனை

    சென்னை:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதன்பின் இப்போது காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. இதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி மற்றும் மாநில நிதியமைச்சர்கள், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகம் சார்பில், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் பங்கேற்றுள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய வரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. மேலும், ஆன்லைன் கேமிங், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. #GST #HousingUnit
    புதுடெல்லி:

    வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. இதற்கான முடிவு கடந்த மாதம் 24-ந் தேதி டெல்லியில் நடந்த 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இதை செயல்படுத்தும்விதம் பற்றி டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடந்த 34-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. அது வருமாறு:-

    * ஏப்ரல் 1-ந் தேதிக்கு முன்னர் பதிவு செய்து கட்டுமானப்பணிகள் நடந்து வருகிற வீட்டு வசதி திட்டங்களுக்கு பழைய சரக்கு, சேவை வரியை தொடர்வது பற்றி முடிவு எடுப்பதற்கு வீட்டு வசதி நிறுவனங்களுக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும். இது வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சலுகையாக அமைகிறது.

    * புதிய வீட்டு வசதி திட்டங்களை பொறுத்தமட்டில், குறைந்த விலை வீடுகளுக்கு உள்ளட்டு வரி சலுகையின்றி 1 சதவீத வரி அமல்படுத்தப்படும். குறைந்த விலை வீடு என்பது ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானித்தபடி, மாநகரங்கள் தவிர்த்த நகரங்களில் 60 சதுர மீட்டர், மாநகரங்களில் 90 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கலாம். வீட்டின் விலை ரூ.45 லட்சம் வரை இருக்கலாம்.

    * குறைந்த விலை வீடுகளை தவிர்த்து பிற வீடுகளுக்கு அவை ஏப்ரல் 1-ந் தேதியோ, அதற்கு பின்னரோ பதிவு செய்து இருந்தால் அவற்றுக்கு உள்ளட்டு வரி சலுகையின்றி 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். ஏப்ரல் 1-ந் தேதிக்கு பின்னர் தவணை செலுத்தக்கூடிய வீடுகளுக்கும் இது பொருந்தும்.  #GST #HousingUnit

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், 99 சதவீத பொருட்கள் 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. #GST #GSTCouncilMeeting
    புதுடெல்லி:

    நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.



    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.

    ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சமீபத்தில் மும்பையில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்கள், 18 அல்லது அதற்கு குறைவான சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். இன்றைய கூட்டத்தில் இதுபற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

    ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு மட்டும் 28 சதவீத வரியை தொடரவும், மற்ற 99 சதவீத பொருட்கள் 18 சதவீதத்துக்கு கீழ் கொண்டுவரவும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.சி., ஆட்டோமொபைல், டயர், சிமெண்டு, ரியல் எஸ்டேட் சாதனங்கள், சில எலெக்ட்ரானிக் கருவிகள் ஆகியவை மீதான வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GST #GSTCouncilMeeting
    நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. #GST #GSTCouncil
    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு  வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களை கீழே பார்க்கலாம்:-

    முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:

    பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் (12 சதவிகித வரி தற்போது உள்ளது),  முதியோர் இல்லங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், பளிங்கு, மரம் மற்றும் கற்களால் செய்த சாமி சிலைகள், தங்கத்திலான மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்படாத ராக்கி கயிறுகள்

    28 சதவிகித வரியில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்ட பொருட்கள்:

    ஏ.சி., பிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர்கள், வாஷிங் மெஷின், டிவி (68 செ.மீ வரை), வாக்யூம் கிளீனர்ஸ், பெயிண்டுகள், முடி திருத்தும் கருவி, முடி உலர்த்தும் கருவி, பாடி செண்ட் மற்றும் ஸ்பிரேக்கள், லித்தியம் இயான் பேட்டரிகள், குளியலறை ஸ்பிரே, டிரைலர்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் சாதனங்கள்.

    18 சதவிகித வரியில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்ட பொருட்கள்:

    பர்சுகள், நகைப்பெட்டிகள், ஹேண்ட் பேக்குகள், கண்ணாடி மற்றும் புகைப்பட பிரேம்கள், அலங்கார பிரேம்கள், மண்ணெணை அடுப்பு, இரும்பு அலங்கார பொருட்கள்.

    5 சதவிகித வரிக்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள்:

    யூரியா உரம், எத்தனால், திட உயிரி எரிபொருள் குண்டுகள், கையால் நெய்யப்பட்ட தரை விரிப்புகள், கையால் தயாரிக்கப்பட்ட சவுரி முடிகள், கோரைப்புற்களை கொண்டு கையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள்.

    இந்த அம்சங்கள் யாவும் வரும் 27-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என நிதி மந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். 
    டெல்லியில் இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. #GSTCouncil #taxratesslashed #consumerproducts
    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு  வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு  12 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து பூரண விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    68 சென்ட்டி மீட்டர்கள் வரையிலான தொலைக்காட்சி பெட்டிகள். லித்தியம் இயான் பேட்டரிகள், வேக்கம் கிளீனர்கள், அறைவை இயந்திரங்கள், மிக்சி, வாட்டர் ஹீட்டர்கள், தலை, கைகளுக்கான டிரையர்கள், பெயிண்ட், வார்னீஷ், நறுமணப் பொருட்கள், குளியலறை ஸ்பிரே, ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள், டிரைலர்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் சாதனங்களுக்கான வரி 28-லிருந்து 18 சதவீதமாக இனி குறைக்கப்படும்.

    பளிங்கு, மரம் மற்றும் கற்களால் செய்த சாமி சிலைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 100 சதவீதம் விலக்கு. (தங்கத்திலான மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்படாத) ராக்கி கயிறுகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 100 சதவீதம் விலக்கு. 

    5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்பவர்கள் இனி காலாண்டுக்கு பதிலாக மாதந்தோறும் ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்துக்கான வரி 5 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் கூடிய 46 பரிந்துரைகள் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. 

    இந்த அம்சங்கள் யாவும் வரும் 27-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என நிதி மந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். #GSTCouncil #taxratesslashed #consumerproducts
    ×