என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "GST fraud"
- ரூ.1½ கோடியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு:
பெங்களூரு பையப்பனஹள்ளியை சேர்ந்தவர் கேசவ்தக். தொழில் அதிபரான இவர். கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அதிகாரிகள் என்று கூறி பெண் உள்பட 4 பேர் வந்து அவரை அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் கேசவ்தக்கிடம் உங்கள் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக உங்கள் மீது புகார் வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றால் ரூ.3 கோடி தரவேண்டும் என்று மிரட்டினர்.
அதற்கு கேசவ்தக் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர்கள், கேசவ்தக்கை இந்திராநகர் பகுதிக்கு காரில் கடத்தி சென்று தாக்கினர்.
பின்னர் அவரது நண்பர் ரோஷன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள் ரூ.3 கோடி எடுத்துவரும்படி மிரட்டினர். இதை கேட்ட ரோஷன், ரூ.1½ கோடியை எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கிய கும்பல் கேசவை கீழே இறக்கிவிட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.
இந்தநிலையில் கும்பல் மீது சந்தேகம் அடைந்த கேசவ்தக், ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எந்த சோதனையும் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறினர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் தன்னை ஏமாற்றியதை அறிந்த கேசவ்தக், இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மத்திய ஜி.எஸ்.டி. அதிகாரிகளான சோனாலி சஹாயி, மனோஜ் சைனி, அபிஷேக், நாகேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கேசவ்தக் வீட்டிற்கு வாடகை காரில் சென்றதும். காரை வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கேசவ்தக் வீட்டிற்கு சென்றதும். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சுமார் 15 கிலோமீட்டர் சாலையோரம் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி சோதனை செய்த போது அவர்கள் கேசவ்தக் வீட்டிற்கு வந்து சென்றது உறுதியானது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 34 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 50 காசோலை புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1½ கோடியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசாங்க கருவூலத்திற்கு தவறான இழப்பை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
- லஞ்சம் கொடுத்து ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெற்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 6 போலி எலக்ட்ரானிக் பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.46 கோடி ஜி.எஸ்.டி. வரியை திரும்ப ஒப்படைத்ததாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு பிரிவுகளை தொடங்கிய குற்றவாளிகளுடன் அதிகாரிகள் சதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐதராபாத்தில் உள்ள வளாகத்தின் உரிமையாளர்களிடம் இருந்து மின்சாரக் கட்டணம் வசூலித்து போலி நிறுவனங்களைத் தொடங்கினர் . பின்னர் அவர்கள் போலி மற்றும் ஜோடிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தங்களை சமர்ப்பித்து ஜி.எஸ்.டி. போர்ட்டலில் நிறுவனங்களை பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வரி ஆலோசகர் சிராக் ஷர்மாவுடன் கிரிமினல் சதி செய்து, போலி மற்றும் ஜோடிக்கப்பட்ட விலைப்பட்டியல்கள், இ-வே பில்கள் மற்றும் போலி நிறுவனங்களை உருவாக்கி, இல்லாத நிறுவனங்களை ஏற்கனவே இருப்பதாகக் காட்டி, லஞ்சம் கொடுத்து ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெற்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இ-பைக்குகளை தயாரிக்காமல், அரசாங்க கருவூலத்திற்கு தவறான இழப்பை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். ஜிஎஸ்டி அதிகாரிகள் மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் கிரிமினல் சதி செய்து, லஞ்சம் வாங்கி, தங்கள் அதிகாரபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்கள் துறையின் விதிகள் மற்றும் நடைமுறைகளை வேண்டுமென்றே மீறி, பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நல்கொண்டா பிரிவு ஜிஎஸ்டி துணை ஆணையர் ஸ்வர்ண குமார், அபிட்ஸ் வட்டத்தின் உதவி ஆணையர் (மாநில வரிகள்) கெலம் வேணு கோபால், மாதப்பூர்-1 வட்டம், வெங்கட ரமணா, துணை ஆணையர் விஸ்வ கிரண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிம்லா :
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட பர்வானுவில் அதானிக்கு சொந்தமான அதானி வில்மர் குடோன் உள்ளது. மாநிலத்தில் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து குடோனில் மாநில கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அங்குள்ள இருப்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
எனினும் இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதானி நிறுவனத்தின் மொத்த ஜி.எஸ்.டி.யும் வரிகடன் மூலம் நேர் செய்யப்பட்டதாகவும், பணமாக வழங்கவில்லை என்றும் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த சோதனை வழக்கமானது என அதானி நிறுவனமும் தெரிவித்து உள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும விவகாரம் இந்திய அரசியலின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் இந்த நேரத்தில் இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் நிறுவனங்கள் போலி ரசீதுகளை தாக்கல் செய்து ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாங்காத பொருட்களை வாங்கியது போல ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் மராட்டிய மாநிலம் ராய்காட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஜி.எஸ்.டி.யில் ரூ.650 கோடி செலவுக்கான ரசீதுகளை தாக்கல் செய்து, கட்டிய வரியில் ரூ.110 கோடியை திரும்ப பெற்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நிறுவனத்தை சேர்ந்த ரகேஷ் அனுமன் பிரசாத் (வயது38), அவரது உறவினர் ஆனந்த் (40) ஆகியோர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.110 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் வாங்காத பொருட்களுக்கு போலி ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதையடுத்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரகேஷ் அனுமன் பிரசாத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்