search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guiness record"

    • ரஸ்ஸல் ஸ்டோவர் மொத்தம் 205 ராட்சத சாக்லேட் துண்டுகளைப் பயன்படுத்தினார்.
    • சாக்லேட் பெட்டிக்குள் கேரமல், தேங்காய் கொத்து, பழம் மற்றும் நட்ஸ் கேரமல் என 9 வகை சாக்லெட்டுகள் இடம்பெற்றுள்ளன.

    அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிராண்ட் நிறுவனம் ஒன்று 2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்கெட் பெட்டியை தயாரித்துள்ளது,

    இந்த அற்புதமான சாக்லேட் படைப்பு ஒவ்வொன்றும் வாய் ஊறும் ஒன்பது வகை சாக்லேட் சுவைகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சாக்லேட் பிரியர்களின் கற்பனையாக இருக்கக்கூடிய ஒரு பொருளை சாக்லேட் தயாரிப்பாளர் ஒருவர் உலக சாதனையாக படைத்துள்ளார்.

    கின்னஸ் உலக சாதனைபடி, 2,547.50 கிலோ எடையுள்ள பிரமாண்டமான சாக்லேட் நிரப்பப்பட்ட பெட்டியுடன், ரஸ்ஸல் ஸ்டோவர் (அமெரிக்கா) என்ற நிறுவனம் சாதனையை முறியடித்தது.

    ஒப்பிடுகையில், இது வயதான கருப்பு காண்டாமிருகத்தின் எடையைப் போன்றது. விலங்குகள் பொதுவாக 1,400 மற்றும் 2,800 கிலோ (3,086 மற்றும் 6,173 பவுண்டுகள்) எடையுள்ளதாக இருக்கும்.

    சாக்லேட் நிரப்பப்பட்ட பெட்டியானது 9.27 மீ x 4.69 மீ x 0.47 மீ (30.43 அடி x 15.41 அடி x 1.55 அடி) அளவிடப்பட்டதாகவும், கடந்த ஏப்ரல் 17ம் தேதி அமெரிக்காவின் மிசோரி, கன்சாஸ் நகரில் இது காட்சிபடுத்தப்பட்டதாகவும் உலக சாதனை பராமரிப்பு அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

    இந்த சாக்லேட் பெட்டிக்குள் கேரமல், தேங்காய் கொத்து, பழம் மற்றும் நட்ஸ் கேரமல், வேர்க்கடலை கொத்து, பெக்கன் டிலைட், ராஸ்பெர்ரி கிரீம், ஸ்ட்ராபெரி கிரீம், டோஃபி மற்றும் ட்ரஃபுல், அத்துடன் சாக்லேட்-மூடப்பட்ட பாதாம் ஆகியவற்றின் பெரும் பகுதியும் ஒன்பது வெவ்வேறு சாக்லேட் சுவைகளால் நிரப்பப்பட்டது.

    சாதனையை முறியடிக்கத் தேவையான குறைந்தபட்ச எடையை அடைய, ரஸ்ஸல் ஸ்டோவர் மொத்தம் 205 ராட்சத சாக்லேட் துண்டுகளைப் பயன்படுத்தினார். அவை ரஸ்ஸல் ஸ்டோவர்யின் ஆலைகளில் வடிவமைக்கப்பட்டன.

    மேலும் இந்த முயற்சியின் போது ஒவ்வொரு சாக்லேட் துண்டும் எடைபோடப்பட்டது. மேலும், சிறிய துண்டுகள் சுமார் 4.53 கிலோ எடை கொண்டது. அதே வேளையில், சில பெரிய சாக்லேட்கள் 16 கிலோவிற்கும் (35 பவுண்டுகள்) எட்டின.

    • வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார்.
    • 2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்த சாதனை முயற்சி.

    தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்த சாதனையை அடைய ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.

    ஆனால் அவர் ரூயிபோஸ் வகை தேநீரில் அசல், வெண்ணிலா மற்றும் ஸ்டாபெரி என மூன்று வகைகளில் 249 கப் தேநீர் தயாரித்துள்ளார்.

    தென்னாப்பரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தாவரமான அஸ்பலதஸ் லீனரிஸ் என்கிறத புதர் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீரை ரூயிபோஸ் என்று அழைக்கப்படுகிறது.

    சாதனை முயற்சியின்போது வாலன்டின் தெளிவான மனதை கொண்டு, விறுவிறுப்பாக ஒவ்வொரு டீ கோப்பையிலும் 4 தேநீர் பைகளை போட்டார். சரியான ரூயிபோஸ் தேநீராகத் தகுதிபெற ஒவ்வொரு தேநீர் பையும் குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு நன்கு ஊற வேண்டும். முதல் மூன்று தேநீர் கோப்பைகளில் தேநீர் பைகளை நிறப்பிய பிறகு, அடுத்த கோப்பையை நிறப்பினார்.

    இப்படி வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார். இதில் ஒரு கப் மட்டும் அளவில் பூர்த்தியாகாததால் நீக்கப்பட்டது.

    சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு தேநீரை அருந்தினர்.

    2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்தவும், வுப்பர்தல் சமூகத்தின் மீள்தன்மையைக் கொண்டாடும் விதமாகவும் இங்கார் வாலன்டின் உலக சாதனையில் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், இந்த சாதனையின் மூலம், தங்களின் வுப்பர்தல் சமூகம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

    • ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார்.
    • அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார்.

    நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி, அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள்.

    உடற்பயிற்சி ஆர்வலர்களான இவர்கள் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்- அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

    பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள ஹொவெனன் விமான தளத்தில், ஹெலிகாப்டர் குறிப்பிட்ட அடி உயரத்தில் ஒரே நிலையில் அசையாமல் பறந்து கொண்டிருந்தபோது அடிப்பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு புல்-அப்ஸ் செய்தனர்.

    முதலில் அர்ஜென் ஆல்பர்ஸ், ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். இதனால் முன்பு 23 முறை புல்-அப்ஸ் எடுத்திருந்த அர்மேனியாவின் ரோமன் சஹ்ரத்யனின் சாதனையை முறியடித்தார்.

    அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார். அவர் ஒரு நிமிடத்தில் 25 முறை புல்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார். அர்ஜென் ஆல்பர்ஸ் 2-ம் இடம் பிடித்தார்.

    சென்னை விமானநிலையத்தில் கின்னஸ் சாதனைக்காக 300 வகை இயற்கை உணவுகளை மாணவர்கள் தயாரித்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்து உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்தில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    எண்ணை சேர்க்காமல், காய்கறிகளை வேக வைக்காமல் 3.05 நிமிடத்தில் இந்த இயற்கையான உணவுகள் தயாரிக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள் 300 பேர் கலந்துகொண்டு 300 வகையான உணவுகளை தயாரித்தனர்.

    கின்னஸ் சாதனைக்காக ஜியோ இந்தியா பவுண்டேசன் மற்றும் விமானநிலைய கல்யாண் மயி ஆகியோர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை விமானநிலைய இயக்குனர் சந்திரமவுலி, நடிகை அஞ்சனா, சமையல் கலைஞர் படையல் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ChennaiAirport
    ×